விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள் கள்ளக்குறிச்சியில் தொடரும் அவலம்
2 Nov 2026, 11:25 pm

விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள் கள்ளக்குறிச்சியில் தொடரும் அவலம்

உளுந்தூர்பேட்டை,நவ.2-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த எல வனாசூர்கோட்டை பகுதியில் விவசாய நிலங்களில் மனித கழிவுகள் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது.இப்பகுதியில் தனியார் கழிவுநீர் வாகனங்களில் கொண்டு வரப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் குடியிருப்புபகுதிகளுக்கு அருகில் உள்ள விவசாய விளைநிலங்களில் சட்விரோதமாக கொட்டப்படு கிறது. இது கடுமையான சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

இவ்வாறு மனிதகழிவுகளை விளைநிலங்க ளில் கொட்டுவதால் பயிர்கள் முற்றிலும் நாசமடைவதுடன், நிலத்தடி நீரும் கடுமையாக மாச டைந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

விதிகளின்படி செப்டிக் டேங்க் கழிவுகளை பொது மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலோ, விவசாய விளைநிலங்களிலோ கொட்டக்கூடாது. அதற்காக நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இயற்கை முறையில் சுத்தி கரிக்கப்படும் இடங்களில் மட்டுமே உரிய முறையில் பதிவு செய்து கொட்ட வேண்டும். மேலும் செப்டிக் டேங்க் கழிவு ஏற்றி வரும் வாகனங்களை அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விதிமுறைகளை மீறி எலவனாசூர் கோட்டையில் இரவு நேரங்களில் இந்த செயல் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, விதிமீறலில் ஈடுபடும் தனியார் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.