சாலையோர வியாபாரிகள் மனிதச் சங்கிலி போராட்டம் கைது நடவடிக்கைக்கு கண்டனம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>சாலையோர வியாபாரிகள் மனிதச் சங்கிலி போராட்டம் கைது நடவடிக்கைக்கு கண்டனம்</strong></p>
<p>சென்னை, பிப்.17 - சென்னை நகரின் என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியில் பல பத்தாண்டுகளாக மாநகராட்சியின் அடையாள அட்டையுடன், சட்டப்படி வியாபாரம் செய்து வந்த ஏழை சாலையோர வியாபாரி களை, கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் வழங்காமல் மாநக ராட்சி அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன் திடீரென அப்புறப்படுத்தினர். இதனால் தங்களின் ஒரே வாழ்வா தாரத்தை இழந்த வியாபாரிகள் தொடர்ந்து பல்வேறு முறைகளில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று போராட்டத்தின் 50 ஆவது நாளை யொட்டி, சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் நடை பெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத் தில் பெண்கள் உட்பட ஏராளமான வியா பாரிகள் கலந்து கொண்டனர். எனினும், அமைதியாக போராடிய வியாபாரிகளை காவல்துறை கைது செய்தது கண்டனத் திற்குரியது. கைது செய்யப்பட்டவர்களில், தமிழ் நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளன மாநிலத் தலைவர் சி.திருவேட்டை, வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெ.தன லட்சுமி, நகர விற்பனைக் குழு உறுப்பி னர்கள் பலராமன், மணி, மம்மது, சாகுல் அமீது மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் பூமிநாதன், குமார் ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ் விடுவித்துள்ள அறிக் கையில், “கைது செய்யப்பட்ட வியா பாரிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அப்புறப்படுத்தப் பட்ட வியாபாரிகளை அவர்களது பழைய இடங்களில் மீண்டும் அமர்த்த வேண்டும். மாநகராட்சி சட்ட விதிமுறை களை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த அநீதிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், அந்தப் போராட் டத்திற்கு சிஐடியு ஆதரவாக நிற்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.</p>
