புலிகள் காப்பக கள இயக்குநர் எச்சரிக்கைஉதகை, ஆக.13-இனிவரும் காலங்களில் மனித – விலங்கு மோதல்கள் அதிகரிக்க
14 Aug 2026, 12:08 am

புலிகள் காப்பக கள இயக்குநர் எச்சரிக்கைஉதகை, ஆக.13-இனிவரும் காலங்களில் மனித – விலங்கு மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, உதகையில் நடைபெற்ற கருத்தரங்கில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில், வனவிலங்கு உயிரியல்துறை சார்பில், உலக யானைகள்தினத்தை முன்னிட்டு வனவிலங்கு ஆய்வுகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எபினேசர் தலைமை வகித்தார். பேராசிரியர் வித்யா வரவேற்றார். வனவிலங்குஉயிரியல்துறை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து, உலக யானைகள் தினம் குறித்தும், யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், நாம் அடிக்கடி சொல்வது போல, சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்று அழைக்கப்படுபவை யானைகள். நமது காடுகள் காட்சியளிக்கும் விதம் மற்றும் பல வகையானகாடுகள் உள்ளன. இவை முக்கியமாக யானைகளால் வடிவமைக்கப்பட்டவை. வனப்பாதுகாப்பு அதிகரிப்பு காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள இளம் உயிரியலாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.

வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், ரேடியோ காலர் முறை, வனப்பகுதிகளில் மிகப்பெறும் அச்சுறுத்தலாக உள்ள அந்நிய தாவரங்

கள், இவை எவ்வாறு வனவிலங்குகளின் வாழ்விடம், உணவு உள்ளிட்டவற்றை எவ்வாறு பாதிக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து தீர்வு காணபல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவற்றை இளம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லேண்டானா, சென்னா ஸ்பெட்டாபிளிசிஸ் போன்ற களை தாவரங்களை யானைகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம், என்றார்.

இதன்பின் ஒன்றிய அரசின் வனஉயிரின குற்ற கட்டுபாட்டு மைய இணை இயக்குநர் (ஓய்வு) மாறன்கோபேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.வன உயிரின பாதுகாப்பு சட்டப்படிவனவிலங்குகள் வேட்டையாடுவதை தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் விலங்குகள், நோய்வாய்ப்பட்ட, காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள விலங்குகளை தலைமை வன உயிரின பாதுகாவலரின் அனுமதியின் பேரில் மட்டும் கொல்ல சட்டம் வழிவகை செய்கிறது.

இதேபோல் குறிப்பிட்ட தாவரங்களின் கிளைளை பறிக்கவோ, வேருடன் பிடுங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. தாவரங்கள், வன உயிரினங்களை சட்ட விரோதமாக கடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறையின் கீழ் வன உயிரினகுற்ற கட்டுபாட்டு மையம் துவக்கப்பட்டது. வனவிலங்கு குற்ற நடவடிக்கைகள், தேசிய மற்றும் சர்வதேசஎல்லைகளில் குற்றவாளிகளை கைதுசெய்தல் போன்றவை இதன் பணிகளாகும்.எந்த ஒரு நபரும் அனுமதியின்றி எந்தவொரு வனவிலங்குகளையும், தாவரங்களையும் கடத்துவது குற்றமாகும்.இதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்டவைகள் விதிக்கப்படும், என்றார்.

இதில், டபுள்யு.டபுள்யு.எப் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், விஞ்ஞானி நவீன், தாவரவியல் துறை தலைவர் பிராங்கிளின் ஜோஸ், விலங்கியல்துறை தலைவர் ஜெயபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.