முந்தய பக்கம்

ஐநா-வில் ஹியுகோ சாவேஸ் முழக்கம் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருந்தும் எச்சரிக்கை!

27 Sept 2026, 9:37 pm
ஐநா-வில் ஹியுகோ சாவேஸ் முழக்கம் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருந்தும் எச்சரிக்கை!
<p><strong>ஐநா-வில் ஹியுகோ சாவேஸ் முழக்கம் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருந்தும் எச்சரிக்கை!</strong></p><p>2006 செப்டம்பர் 20-ல் வெனிசுலாவின் அப்போதைய ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் ஐநா பொதுப்பேரவையில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையும், நவீன தாராளமய முதலாளித்துவத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உலகம் மேலும் பெரும் அமைப்பு ரீதியான நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p><p>அமெரிக்கா ஒரு மிகை ஏகாதிபத்தியமாகச் செயல்பட்டு வரும் நிலையில், உற்பத்தித் துறையில் சீனா முந்திவிட்டதுடன் டாலரின் செல்வாக்கும் கேள்விக்குறியாகியுள்ளது. உலக நாடுகளின் ராணுவச் செலவில் 75 சதவீதத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொள்கின்றன. காசாவில் இனப்படுகொலைகள் தொடர்வதோடு, தற்போதைய வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைவைக்கப்பட்டுள்ளார். உலகம் ஒரு பன்முக உலகமாக மாறுவது தெற்குலக நாடுகளின் அவசியத் தேவையாகும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram