மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவுக்கு அமோக ஆதரவு
8 Apr 2026, 5:30 am

மன்னார்குடி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜாவுக்கு அமோக ஆதரவு

மன்னார்குடி, ஏப். 7- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜா, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழுச் செயலாளர் ஜி. தாயுமானவன் கூறினார்.

அவர் கூறுகையில், மன்னார்குடி 160 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை கண்டிராத அபிவிருத்தித் திட்டங்கள், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜா வின் முழு முயற்சியினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையம் ரூ.46 கோடி 46 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

மன்னார்குடி புறவழிச் சுற்றுச்சாலை ரூ.124 கோடியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.258 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகள் முழுமையாக நடைபெறும், புதிய பல அபிவிருத்தி திட்டங்கள் அறிவிக்கப்படவும் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் டிஆர்பி ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றார்.