தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

16 Nov 2025, 3:30 pm
சென்னை விரைவு செய்திகள்

23 கிலோ கஞ்சாவுடன்  2 பேர் கைது

ஆவடி, நவ. 16– பூந்தமல்லி திருவேற் ்காடு கோலடி அருகில் நடத்தப்பட்ட போதை ஒழிப்பு நடவடிக்கையில் சந்தேகத் திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரிடம் இருந்து 23 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. சோதனையின் போது 2 பைகளில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேஷ், தீனதயாளன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடையார்-மேற்கு தாம்பரம் இடையே புதிய பேருந்து சேவை

சென்னை,நவ.16- சென்னை அடையார் மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளுக்கு இடையே புதிய பேருந்து சேவையைச் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்லா வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கேம்ப் ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன் சாவடி வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த துவக்க விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பைக் மோதி முதியவர் பலி

சென்னை,நவ.16- சென்னை, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே நொளம்பூர் ஸ்ரீராம் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த மோகன் குமார் (61) மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், மோகன் குமார் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ரவி (50) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து   இருவர் படுகாயம்

திருவள்ளூர்,நவ.16-  காக்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற் சாலையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பகல் மற்றும் இரவு பணி யில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்த நிலையில், சனிக்கிழமையன்று (நவ.15) இரவு பணியில்  வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பணியா ளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த சிவக் குமார், இந்திரகுமார் ஆகிய இரண்டு வட மாநில இளை ஞர்களுக்கு 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. வெடி சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், படுகாய மடைந்த 2 தொழிலாளர்களையுமி் தீக்காயங்களுடன் மீட்டு  திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்  சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய கூட்டம்

சென்னை,நவ.16- கார்த்திகை மாதம் திங்கள்கிழமை (நவ. 17) தொடங்க இருப்பதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஞாயிறன்று மீன்களை வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் காலை முதலே திரண்டனர். ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப் படகுகள் அதிகாலையிலேயே கரை திரும்பியதால், காணங்கத்தை, சுதும்பு, சங்கரா, காரப்பொடி, இறால், கடமா உள்ளிட்ட சிறிய வகை மீன்களின் வரத்து அதிக மாகக் காணப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.