14 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி முகாம்
7 Oct 2026, 2:06 am

14 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை, அக். 6- வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 14 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு எச்.பி.வி தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 7,120 மாணவியருக்கு இலவசமாக இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இம்முகாமில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சரவணகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் உஷா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.