தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலையை காக்காத அதிமுக தமிழகத்தை எப்படி காப்பாற்றும்?

5 Apr 2026, 5:18 pm
100 நாள் வேலையை காக்காத அதிமுக தமிழகத்தை எப்படி காப்பாற்றும்?
<p><strong>100 நாள் வேலையை காக்காத அதிமுக தமிழகத்தை எப்படி காப்பாற்றும்?</strong></p> <p>கனிமொழி கேள்வி திருப்பூர், ஏப்.5- &nbsp;100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்ற குரல் கொடுக்காத அதி முக எப்படி தமிழகத்தை காப்பாற் றும்? என்று கனிமொழி கருணாநிதி பரப்புரையில் கேள்வி எழுப்பினார், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் &nbsp;மு.பெ. சாமிநாதனை ஆதரித்து, &nbsp;திமுக துணை பொதுச்செயலாள ரும், எம்.பி.யுமான கனிமொழி கரு ணாநிதி ஞாயிறன்று வெள்ளகோவி லில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது பொதுமக்கள் மத்தி யில் அவர் பேசுகையில், தமிழக மக் கள், விவசாயிகள் மற்றும் சிறு பான்மையினருக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த எந்தவொரு திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கவில்லை. குறிப்பாக, ஊரக வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க பாஜக முயற்சிக் கிறது. உங்களிடம் வாக்குக் கேட்க வருபவர்களிடம், இத்திட்டத்தைப் பாதுகாக்க ஏன் குரல் கொடுக்க வில்லை என்று கேள்வி எழுப்புங்கள். தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாதவர்கள், எவ் வாறு உரிமைகளை பாதுகாப்பார் கள்? மக்களுக்குக் கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றாதவர் எடப் பாடி பழனிசாமி. ஆனால், சொன் னதை செய்தவர் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அன்று கலைஞர் வழங்கிய இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் இன் றும் பல வீடுகளில் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. விவசாயிக ளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய தும் கலைஞர்தான். அதன் தொடர்ச்சி யாக, அடுத்த முறை ஆட்சிக்கு வரும் போது 20 லட்சம் விவசாயிகளுக்கு மின் மோட்டார்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வட்டமலை அணைக்கு பரம்பிக் குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து ஏற்கனவே மூன்று முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு களில் அணைக்கு நிரந்தரமாகத் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நெசவா ளர்களுக்கான உதவித்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்கும் ஒரே இயக்கம் திமுகதான். அதிமுக இன்று &rsquo;அமித்ஷா திமுக&rsquo;வாக (பாஜகவின் நிழலாக) மாறியுள்ளது. எனவே, நடுவில் வந்தவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடும் மு.பெ. சாமி நாதனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.