‘ஜென் இசட்’ தலைமுறையின் போராட்டங்களைப் புரிந்துகொள்வது எப்படி? - பேரா. விஜய் பிரசாத்
11 Nov 2025, 3:41 pm

‘ஜென் இசட்’ தலைமுறையின் போராட்டங்களைப் புரிந்துகொள்வது எப்படி?

சிலியில் 2019-ஆம் ஆண்டு தலைநகர் சாண்டியாகோவில் நடந்த மக்கள் போராட்டங்களின் போது சுவரில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அந்நாட்டின் ஆழமான சிக்கலைக் காட்டின: “நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தார்கள், இறுதியில் நம் பயத்தையும் சேர்த்துப் பறித்துவிட்டார்கள்” மற்றும் “இது 30 பெசோஸ் பிரச்சனை அல்ல, 30 ஆண்டுகாலப் பிரச்சனை”. மெட்ரோ ரயில் கட்டணத்தை 30 பெசோஸ் உயர்த்தியதும், சமூக நலத் திட்டங் களுக்கான நிதி குறைக்கப்பட்டதும், 30 ஆண்டுகால நவ தாராளமயக் கொள்கைகளால் மக்கள் சந்தித்த மோசமான பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தின. இப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய வர்கள், 2001 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் பிறந்த மாணவர்களான ‘]

ஜென் Z தலைமுறை’யினர் (அதாவது நம் காலத்தில் கடைசியாக வந்துள்ள தலைமுறை) ஆவர். ஆனால், இவர்களை வெறும் ‘தலை முறை’ என்று அழைப்பது, இவர்களது எழுச்சிமிகு போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, குறைந்த ஊதியம், ஆட்சியாளர் களின் ஊழல் உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான உள்நாட்டுச் சிக்கல்களையும் மறைக்கிறது. சமூகவியலும் உலகளாவிய எழுச்சியும் சிலி போராட்டம் தனிப்பட்ட நிகழ்வல்ல.

இதே காலகட்டத்தில் பிறந்த இளைஞர்கள் உலகம் முழுவதும் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். இந்தியாவில் 2012-இல் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான எழுச்சி, அமெரிக்காவில் 2018-இல் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு எதிரான ‘மார்ச் ஃபார் அவர் லைவ்ஸ்’ இயக்கம், காலநிலைச் செயற்பாட்டா ளர் கிரெட்டா தன்பெர்க் 2018-இல் தொடங்கிய ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்’ பிரச்சாரம், 2022-இல் இலங்கையில் மாபெரும் போராட்டம் (‘அரகலய’) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தப் போராட்டங்கள் ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு எதிரான தார்மீகக் கோபமாகத் தொடங்கி, படிப்படியாக, இளைஞர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்க முடியாத அரசின் மீதான விமர்சனமாகவும் கோபமாகவும் மாறின. ஜெர்மன் அறிஞர் கார்ல் மான்ஹெய்ம் (1928), ‘தலைமுறை’ என்பது பிறந்த காலத்தை வைத்து அல்லாமல், ஒரு குழுவினரின் சமூக நிலையை வைத்தே வரையறுக்கப்படுகிறது என்றார். குழப்பமான மாற்றங்களை அனுபவித்து, பாரம்பரியத்தை எதிர்கொள்ளும் ஒரு குழுவே சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாகிறது. ஆனால், நவ-தாராளமய கலாச்சாரத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்வந்த தலைமுறைகள் வெறுமனே சந்தைப்படுத்தும் ‘பிராண்டுகளாக’ மாற்றப்பட்டன. சமூகத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்த தால் விரக்தியடைந்த இளைஞர்கள், தோல்வி யடைந்த அரசுகளுக்கு எதிராக இன்று வீதியில் இறங்குகின்றனர். இந்த எழுச்சிகளைப் புரிந்துகொண்டு, அதை முற்போக்கான திசையில் செலுத்த ஏழு கோட்பாடுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ஜென் ‘Z’ (ஜென் இஸட்) எழுச்சிகளைப் புரிந்துகொள்வதற்கான ஏழு கோட்பாடுகள் 1

. இளைஞர்கள் அதிகமுள்ள தெற்குலக நாடுகள்: தெற்குலக நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்வதேச வங்கிக் கடன்களால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளாலும், அரசுகள் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிகளை வெட்டிச் சுருக்குவதாலும் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றப் பேரழிவுகள் ஆகியவற்றால் இளம் தலைமுறையினர் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். 2. வேலையின்மையால் ஏற்படும் விரக்தி: ஜென் இசட் தான் வரலாற்றிலேயே அதிகம் படித்த தலைமுறையாக இருந்தாலும், அதிக கடன்பட்ட மற்றும் போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளது. நவ-தாராள மயம் அரசின் இச்சிக்கலைத் தீர்க்கும் திறனைக் குறைத்துவிட்டதால், இது அவர் களுக்கு அரசின் மீது மிகப் பெரிய கோபத்தை உருவாக்குகிறது. 3. வாழும் இடத்திலேயே நல்ல வாழ்க்கையை விரும்பும் இளைஞர்கள்: கண்ணியமான வாழ்க்கைக்காக வெளிநாடு களுக்குப் புலம்பெயர வேண்டிய கட்டாயத்து க்கு எதிராக இவர்கள் முழக்கமிடுகின்றனர். சர்வதேச வேலை இடங்களில் நிலவும் இனப் பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் போன்ற காரணங்களால், தங்கள் வாழ்விட த்திலேயே வேலை செய்ய விரும்புகிறார்கள். 4.விவசாயப் பின்னணியும் நகரமயமாக்க லும்: பெரிய விவசாய வணிக மற்றும் சுரங்க நிறுவனங்களால் சிறு விவசாயிகள் சுரண்டப்படுவதால், கிராமப்புறத்தில் வாழ முடியாத சூழல் உருவாகிறது. சோர்வடைந்த விவசாய வர்க்க இளைஞர்கள் நகரங்களை நோக்கி நகர்கின்றனர். இவர்களின் கிராமப்புற அனுபவம், நகரப் போராட்டங்களின் முக்கியப் படையாக இருக்க உதவுகிறது. 5. காலநிலை நெருக்கடி உடனடிக் காரணி வறுமை: காலநிலை மாற்றம் என்பது அவர்களுக்கு வேலை இழப்பு,

வீடிழப்பு மற்றும் விலைவாசி உயர்வு மூலம் அவர் களை உடனடியாக வறுமையின் பிடியில் தள்ளிவிடும் காரணியாக உள்ளது. ஏகாதி பத்திய நாடுகளின் கனிம வளங்களுக்கான சுரண்டலும் கிராமப்புற மக்களைப் பாதிக்கிறது. 6. பாரம்பரிய அரசியலின் இயலாமை: பாரம்பரிய அரசியல் அமைப்புகளால் ஜென் இசட் தலைமுறையின் விரக்திகளைத் தீர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகள் அமெரிக்காவின் அழுத்தத்தால் உருவான கடன் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் முடங்கிக் கிடக்கின்றன. இது தெற்குலக நாடுகளில் ஒரு அரசியல் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. அலட்சியமான அதி காரிகளும், வன்முறையால் போராட்டங் களைக் கலைக்கும் காவல்துறையும் மட்டுமே அரசுடன் தொடர்புகொள்ள இவர்களுக்கு கிடைக்கிறது. 7. முறைசாரா வேலை மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு: முறைசாரா துறைகள் மற்றும் கிக் வேலைகள் அதிகரித்துள்ளன. இது தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வோ, தொழிற்சங்கங்களில் உறுப்பின ராகும் எண்ணமோ இல்லாத ஒரு ஒழுங்கற்ற சமூகத்தை உருவாக்கியுள்ளது. சிந்தனை களையும் உத்திகளையும் பரப்பும் தகவல் தொடர்பு கருவியாகச் சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், சமூக ஊடகங்களே போராட்டங்களின் முக்கிய உந்துசக்தி என்று சொல்வது தவறான கூற்று. சவால்களும் முற்போக்குத் திசையும் இந்தப் போராட்டங்கள் பொதுவாக நீண்டகாலக் கட்டமைப்பு நெருக்கடிகளை அரிதாகவே கையாள்கின்றன; பெரும்பாலான போராட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் கோபத்தில் முடிவடைகின்றன. சோசலிச சக்திகளுக்கு உள்ள சவால் என்னவென்றால், ஜென் இசட் தலைமுறைக்கு உள்ள உண்மையான குறைகளை ஒரு திட்டத்தின்படி ஒருங்கிணைத்து, சமூக உபரியில் (வரிப்பணத்தில்) அதிக பங்கைக் கேட்டு, இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்துவதே ஆகும். தமிழில் : சேது சிவன்