முந்தய பக்கம்

எல் நினோ தாக்கம் தமிழ்நாட்டில் எதிர் கொள்வது எப்படி?

19 Jul 2026, 10:54 pm
எல் நினோ தாக்கம் தமிழ்நாட்டில் எதிர் கொள்வது எப்படி?
<p><strong>எல் நினோ தாக்கம் தமிழ்நாட்டில் எதிர் கொள்வது எப்படி?</strong></p><p>அம்பத்தூர், ஜூலை 19- புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக் கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் எல் நினோ தாக்கம் குறித்தும், சாதாரண மக்கள் அதனை எதிர்கொள் வது மற்றும் தற்காத்துக் கொள்வது குறித்தும் அம்பத்தூரில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் பூவுலகின் நண்பர் கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல் வன், எக்ஸ்னோரா அமைப் பின் தலைவர் செந்தூர் பாரி, தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று மக்களிடையே எல் நினோ வின் பாதிப்புகள் எப்படி இரு க்கும் என்றும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள தனி நபர்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும், அரசு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள குறித்தும் எடுத்துரைத்தனர். சௌ.சுந்தரமூர்த்தி, மணிசேகரன், மனோகரன், அறவாழி அசோக்குமார், லோகீஸ்வரன், சிங்கம் ரமேஷ், எக்ஸ்னோரா மோகனசுந்தரம், தீபா, அரிமா சங்கரி தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற தாய் தமிழ் பள்ளி மாண வர்களின் சுற்றுச்சூழல் சார்ந்த கலைநிகழ்ச்சி அனை வரையும் வெகுவாகக் கவர்ந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram