தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

21 Dec 2025, 2:23 pm
தொழில்நுட்ப கதிர்

சாட்ஜிபிடி-இல் போட்டோஷாப்  - புகைப்படங்களை  எடிட் செய்வது எப்படி?

சாட்ஜிபிடி-இல் நேரடியாக போட்டோஷாப் பயன் படுத்தி புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி கிடைக்கிறது.   பொதுவாக, புகைப்படங்களை எடிட் செய்ய அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop) போன்ற மென்பொருட் கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை பயன்படுத்துவது கடினம் என்று பலர் நினைப்பதுண்டு. இதை மாற்றும் வகையில், அடோப் நிறுவனம் சாட்ஜிபிடி உடன் இணைந்து, Pho toshop, Acrobat, Adobe Express போன்ற செயலிகளை நேரடியாக சாட்ஜிபிடி-இல் பயன்படுத்தும் வசதியை அறி முகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், எளிதாக புகைப் படங்களை எடிட் செய்யவும், PDF கோப்புகளில் திருத்தம் மேற்கொள்ளவும், போஸ்டர்கள், அழைப்பிதழ்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கவும் முடியும். சாட்ஜிபிடி-இல் Adobe செயலிகளை பயன்படுத்துவது எப்படி? HChatGPT ஐ திறக்கவும் HSettings > Apps & Connectors என்பதற்கு செல்லவும் Hநீங்கள் பயன்படுத்த விரும்பும் Adobe செயலியை தேர்வு செய்யவும் HConnect என்பதை கிளிக் செய்து இணைப்பை உறு திப்படுத்தவும். Hபின்னர் ChatGPT Prompt Bar-இல் உள்ள + ஐகானை கிளிக் செய்யவும். ⦁    “More” என்பதைத் தேர்வு செய்து, விருப்பமான Adobe செயலியை பயன்படுத்த தொடங்கலாம்.

சாட்ஜிபிடி-இல் சாட்களை பின் செய்யும் அம்சம்!

சாட்ஜிபிடி-இல் சாட்களை (Chats) பின் (Pin) செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய தகவல் பரிமாற்ற செயலிகளில் இருப்பது போன்று சாட்ஜிபிடி-யிலும் pinned chats அம்சம் கொண்டுவர வேண்டும் என கடந்த செப்டம்பரில் OpenAI நிறுவனத்திடம் பயனர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இதை தொடர்ந்து, தற்போது டிசம்பர் மாதத்தில், ஓபன் ஏஐ நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையப் பதிப்புகளுக்கான பின் செய்யப்பட்ட உரையாடல் அம்சம் தற்போது வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தாங்கள் விரும்பும் சாட்-ஐ, சாட்களின் உச்சியில் தோன்றுமாறு அமைக்க முடியும்.

சாட்-ஐ பின் செய்வது எப்படி? 1) ChatGPT-இல் உங்களுக்கு முக்கியமான உரையாடலைத் தேர்வு செய்யவும். 2) அந்த சாட் பக்கத்தில் வலது மேற்புறத்தில் மூன்று புள்ளி (...) மெனு-வை கிளிக் செய்யவும். 3) “Pin Chat” என்பதைத் தேர்வு செய்யவும். 4) அந்த சாட் இப்போது உங்கள் ChatGPT-இன் மேல் பகுதியில் தோன்றும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.