தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எனக்கே தெரியாதபோது, அவருக்கு எப்படித் தெரியும்!

31 Mar 2026, 4:50 pm
எனக்கே தெரியாதபோது, அவருக்கு எப்படித் தெரியும்!
<p><strong>எனக்கே தெரியாதபோது, அவருக்கு எப்படித் தெரியும்!</strong></p> <p>செந்தில் பாலாஜி பேட்டி கோவை, மார்ச் 31- கோவை தெற்குத் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினரை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை தெற்குப் பகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்டிற்கு செவ்வாயன்று வருகை தந்த அவருக்கு, அந்த சமூகத்தினர் தலைப் பாகை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித் தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய செந்தில் பாலாஜி, &rdquo;முதல்வர் கோவைக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகி றார். உங்களின் அனைத்துக் கோரிக்கை களையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். என்னை ஒரு வேட்பாளராக பார்க்காமல் உங்கள் வீட்டுச் சகோதரனாக கருதி ஆத ரிக்க வேண்டும்&rdquo; என கேட்டுக்கொண் டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தனக்கு புதிய ஊர் அல்ல. பல ஆண்டுகளாக இங்கு அரசு மற்றும் அர சியல் பணிகளை மேற்கொண்டு வருகி றேன். &nbsp;அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்கு &nbsp;வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனக் கூறுவது குறித்த கேள்விக்கு, &rdquo;கடந்த தேர்தல் களில் அவர்களின் வாக்கு வங்கி சரிந்துள் ளதை கவனிக்க வேண்டும். இந்த முறை &nbsp;கோவை தெற்கு தொகுதியை கேட்டு வாங் கிப் போட்டியிடுவதாக அவர் கூறுவது வியப் பாக உள்ளது; எனக்கே நான் எங்கு போட்டி யிடுவேன் என்று தெரியாத போது அவருக்கு எப்படி தெரிந்தது?&rdquo; எனப் பதிலடி கொடுத் தார். மேலும், தனது பெயரிலேயே மாற்று வேட்பாளர்கள் களம் இறங்குவது குழப் பத்தை ஏற்படுத்தாது என்றும், உதயசூரி யன் சின்னம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதால் வெற்றி உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடை பெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு 7 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.