செங்கடலில் முக்கிய நகரைக் கைப்பற்றியது ஹவுதி படை! கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்; நெருக்கடி அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
11 Sept 2026, 9:56 pm

செங்கடலில் முக்கிய நகரைக் கைப்பற்றியது ஹவுதி படை! கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்; நெருக்கடி அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

சனா,செப்.11-செங்கடல் வழியேயான சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துப் பாதையில் மிக முக்கியத் துறைமுகமாக ஏமன் நாட்டின் மோகா(Mocha) நகரம் விளங்குகிறது. இதனை ஹவுதி படை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.இந்நகரைக் கைப்பற்றியதன் மூலம், உலக அளவில் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதைகளில் ஒன்றானபாப் அல்-மந்தெப் (Bab alMandeb)ஜலசந்தியை ஹவுதி படையினரால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலைமேலும் உயரும், சர்வதேச அளவில்உள்ள நெருக்கடி அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏமன் நாட்டின் ஒரு பகுதியைஏற்கெனவே ஹவுதி அமைப்பு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய பிறகு, செங்கடல் வழியாகச் செல்லும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுக் கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்னர். மறுபுறம், மற்றொரு முக்கியக் கடல்வழிப் பாதையான ‘ஹோர்முஸ்’ நீர்சந்தியை ஈரான் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன்காரணமாக, உரிய அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அப்பாதை வழியாகச் செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, இவ்வழியாகச் செல்லும் வர்த்தக மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதால், கப்பல் பயணத்திற்கான நேரமும் செலவும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில்தான், பாப் அல்-மந்தெப் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு மோகா துறைமுக நகரத்தை ஹவுதி படை கைப்பற்றியுள்ளது.மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஹவுதி படைகள் தற்போது தெற்குப் பகுதியில் உள்ள ‘துபாப்’ (Dhubab) நகரைநோக்கி முன்னேறி வருகின்றன. இதனிடையே, ஹவுதி படையை எதிர்கொள்ளும் வகையில் ஏமன்அரசு தனது படைகளை ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக மேற்குச் கடற்கரைப்பகுதியில் உள்ள அரசுப் படைகளை அங்கிருந்து “தற்காலிகமாகப் பின்வாங்குமாறு” உத்தரவிடப்பட்டுள்ளது.

“மோகா துறைமுகம் மற்றும் பாப் அல்-மந்தெப் ஜலசந்திப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகள் ஏமனின் உள்நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. அது சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய உலகளாவிய விவகாரம்” என்று கவலை தெரிவித்துள்ள ஏமன் வெளியுறவுத் துறை அமைச்சர் அஃப்ரா அல்-ஜூபா, இந்தச் சூழலுக்கு எதிராகச் சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாப் அல்-மந்தெப் ஜலசந்திசுமார் 29 கி.மீ. அகலம் மட்டுமேகொண்டது. இதனால், ஏவுகணைகள் அல்லது டிரோன்களைப் பயன்படுத்தாமல், சாதாரணத்தரைப்படை பீரங்கிகள் (Artillery)மூலமாகவே அப்பாதை வழியாகச்செல்லும் கப்பல்களைத்தாக்கிப்போக்குவரத்தை முடக்க முடியும்.

சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குத் தங்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஹவுதி படை தெரிவித்துள்ளது. எனினும், சவூதிகப்பல்கள் மீதுதாக்குதல் நடத்துவோம் எனப்பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் சவூதி அரசு, செங்கடல் வழியாகஎண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் சூழலில், ஹவுதி அமைப்பின் இந்த அதிரடி நடவடிக்கை அந்நாட்டிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் சவூதி - ஏமன் கூட்டுப் படைகளுக்கும் ஹவுதி அமைப்பிற்கும் இடையிலான போர் மேலும்தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. தற்போதைய மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.