ஹவுதி தாக்குதல்: சவூதியில் 3 பேர் பலி
9 Oct 2026, 9:02 pm

ஹவுதி தாக்குதல்: சவூதியில் 3 பேர் பலி

சனா / ரியாத், அக். 9சவூதி அரேபியாவின் மீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வ மாகத் தெரிவித்துள் ளனர்.

ஹவுதி கிளர்ச்சி யாளர்களுக்கு எதிராகச் சவூதி அரேபியாவும் அதன் கூட்டணிப் படை களும் கடந்த வார இறுதியில் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலைத்தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவு சவூதிவிமான நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து வெகுரக ஏவுகணைகள் மூலம் மிகப்பெரியதாக்குதலை ஹவுதிப் படை அரங்கேற்றியது. இத்தாக்குதலில் சவூதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

உலகச் சந்தைக்கு அச்சுறுத்தல்

சவூதிக்கும் ஹவுதிகளுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள இந்தத் தீவிர மோதலால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் உலகச் சந்தை மேலும் அதிக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.