எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா: ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை
10 Dec 2025, 4:08 pm
<p><strong>எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா: ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை</strong></p>
<p>அவிநாசி,டிச.10- அவிநாசியில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவ லகத்தில் புதனன்று மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், வடு கபாளையம், நடுவச்சேரி, தண்டுக்காரன்பாளையம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா இல்லாமல் உள்ளனர். ஒரே வீட்டில் இரண்டு குடும்பம் வசித்து வரும் அவல நிலையும் உள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் மண்டல துணை வட்டாட்சியர் கௌரியிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கவுரிமணி, ஒன்றியத் தலைவர் சித்ரா, ஒன்றிய துணைச்செயலாளர் தேவி, ஒன்றிய பொருளாளர் தங்கமணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்டு துணை வட்டாட்சியர் கோரிக்கையை வட்டாட்சிய ரிடம் தெரிவிப்பதாக கூறினார். வெகுதூரத்தில் இருந்து கைக்குழந்தைக ளுடன் வீட்டுமனை பட்டா, அளிக்க வந்த வர்கள், வீடுகளில் இருந்தே சமைத்து எடுத்து வந்த உணவை வட்டாட்சியர் அலுவல கம் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்து சாப் பிட்டனர்.</p>
