தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு பயத்தால் ஓசூரில் மாணவர் தற்கொலை தொடர் உயிரிழப்புகளால் பெரும் சோகம்!

yesterday
நீட் தேர்வு பயத்தால் ஓசூரில் மாணவர் தற்கொலை தொடர் உயிரிழப்புகளால் பெரும் சோகம்!
<p><strong>நீட் தேர்வு பயத்தால் ஓசூரில் மாணவர் தற்கொலை தொடர் உயிரிழப்புகளால் பெரும் சோகம்!</strong></p><p>​​​​​​​ஓசூர், ஜூன் 22 - ஒன்றிய அரசின் நீட் தேர்வு மற்றும் அதன் குளறுபடிகள் காரண மாக தொடர்ந்து மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்து வரும் நிகழ்வுகள், தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஓசூர் அருகே பாக லூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் 20 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், உம்மியம் பட்டியைச் சேர்ந்த சின்னசாமியின் இளைய மகன் வெற்றியானந்தம் (20). மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு, கடந்த மூன்று ஆண்டு களாகத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்தார். இருப்பினும், அதில் வெற்றி பெற முடியாததால் மிகுந்த வேதனையுடன் இருந்துள்ளார். பெற்றோரின் ஊக்கத்தினால் 4வது முறையாகத் தேர்வு எழுதிய நிலை யில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மீண்டும் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இம்முறை யும் தேர்ச்சி பெறத் தவறிவிடுவோமோ என்ற அச்சம் மாணவரைத் தொற்றிக்கொண்டது. இந்நிலையில், பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு வெற்றியானந்தம் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய அவரது தாயார் உத்திரகுமாரி, மகனை உயிரிழந்த நிலையில் கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. உருக்கமான கடிதம் சம்பவ இடத்தில் மாணவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “பெற்றோர் மற்றும் சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்து விடுவேனோ என்ற பயத்தில் கடந்த ஒரு மாதமாக என்னால் தூங்க முடிய வில்லை. இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்ற அச்சத்தாலேயே இந்தத் தவறான முடிவை எடுக்கிறேன். அம்மா, அப்பா, அண்ணா, என்னை மன்னித்து விடுங்கள்” என ஆங்கிலத்தில் உருக்க மாகக் குறிப்பிட்டுள்ளார். காவல் துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடரும் உயிரிழப்புகள் சமீபகாலமாக நீட் தேர்வு தொடர்பாகப் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. கடந்த மே 3-ஆம் தேதி நடந்த தேர்வு முறைகேட்டால் நாடு முழுவதும் 23 லட்சம் மாண வர்கள் பாதிக்கப்பட்டனர். ஜூன் 19 அன்று தருமபுரி அருகே பாலக்கோட்டைச் சேர்ந்த மாணவி ரோஷினி, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் தலா ஒரு மாணவி எனத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் இந்தத் தொடர் உயிரிழப்புகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகரக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் நாகேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.