தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு அதி நவீன கேத் லேப்

5 hours before
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு அதி நவீன கேத் லேப்

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு அதி நவீன கேத் லேப்

கிருஷ்ணகிரி, நவ.14-ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இதய நோய்களுக்கான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கிட அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கேத் லேப் அமைக்கப்பட்டது.

இந்த கேத் லேபை செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ மனையின் செயலாளர் மருத்துவர் லாசியயா தம்பிதுரை தொடங்கி வைத்தார். முதல்வர் மருத்துவர் ஜான்ராஜபதி, மருத்துவ இயக்குநர் கிரீஸ்ஓங்கல், இதயவியல் சிறப்பு நிபுணர் மருத்துவர் அருண்குமார்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தற்போது செயின்ட் பீட்டர்ஸ் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன கேத் லேப் கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மேம்பட்ட இதய சிகிச்சை வசதிகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த வீன தொழில் நுட்பத்தின் மூலம் இதயத்தின் ரத்த நாளங்களை துல்லியமாக கண்டறிந்து இதயம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.இதய ரத்த நாள அடைப்புகளை கண்டறிதல், ஆஞ்சியோகிராம்,மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற நவீன இதய

சிகிச்சைகளை மேற் கொள்வதற்கான வசதிகள் மேம்படுத்தப் படும் என்றும், இனி கிருஷ்ண

கிரி தர்மபுரி திருப்பத்தூர் மக்கள் இந்த மேம்பட்ட

சிகிச்சைக்கு பெங்களூரு, சென்னை என்று சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை,இங்கு நமது மருத்துவமனையில் இந்த மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் மருத்துவமனை செயலாளர் மருத்துவர் லாசியா தம்பித்துரை கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.