பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் ஓசூர் சிப்காட் மேம்பாலம்
16 Jul 2026, 11:46 pm
<p><strong>பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் ஓசூர் சிப்காட் மேம்பாலம்</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 16– ஓசூர் சிப்காட்-1 பகுதியில் உள்ள 6 வழி தேசிய நெடுஞ்சாலையில், முறையான பராமரிப்பு மற்றும் மின்விளக்கு வசதி இல்லாததால் மேம்பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில், சிப்காட்-1 பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கியது. 7 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்தப் பணிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலம் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இருப்பினும், பாலம் திறக்கப்பட்ட தில் இருந்தே பல்வேறு குறைபாடுகள் நீடித்து வருகின்றன. பாலத்தின் இருபுறச் சுவர்களிலும் செடி, கொடிகள் மற்றும் அரச மரங்கள் வளர்ந்துள்ளன. பாதாள சாக்கடை கால்வாய்கள் இன்னும் முழுமையாக அமைக்கப்படாததால், பல இடங்க ளில் ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகின்றன. இதில் சிக்கி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது. அணுகு சாலைகளும் முழுமையடையாமல், செடி, புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பாலத்தின் மீது தார் சாலை முறையாக அமைக்கப்படாததால், ஓராண்டு காலத்திற்குள் மூன்று முறை ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மிக முக்கியமாக, மேம் பாலத்தில் மின்விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை எரியாமல் இருட்டாகவே காட்சியளிக் கின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, போதிய வெளிச்சம் இல்லாத தால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் தவறி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. அதன்பிறகும், மின்விளக்குகளைச் சரிசெய்ய அதி காரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தினமும் இப்பகுதியைக் கடந்து சென்றாலும், அலட்சியமாகவே இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டனம் தெரி வித்துள்ளனர். அரசு நிதியை பெருமள வில் செலவிட்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை உடனடியாகச் சீரமைத்து, மின்விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.</p>
