ஏரிகளை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை
17 Jun 2026, 12:10 am
<p><strong>ஏரிகளை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை</strong></p><p>ஓசூர்', ஜூன் 16- ஓசூர் மாநகராட்சியைச் சுற்றியுள்ள ராமநாயக்கன் ஏரி, சந்திரமுகி ஏரி, தர்கா ஏரி, அலசநத்தம் ஏரி மற்றும் முதுகுறுக்கி ஏரிகள் ஆகாயத்தாமரைகளால் முழுமை யாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏரிகளில் மழை நீருக்குப் பதிலாகக் கழிவுநீர் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது; மக்கள் குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இக்கோரிக்கையை வலி யுறுத்தி, ஓசூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன், ஏரிகளைத் தூர்வாரி ஆகாயத் தாமரை களை அகற்றவும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் கோரி மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஓசூரின் நீர் ஆதாரத்தை மீட்க வே</p>
