ஓசூரில் ‘இளைய நிலா’ இசைச் சங்கம் தொடக்கம்: மூத்த கலைஞர்களுக்கு உதவி
8 Jul 2026, 10:56 pm
<p><strong>ஓசூரில் ‘இளைய நிலா’ இசைச் சங்கம் தொடக்கம்: மூத்த கலைஞர்களுக்கு உதவி</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 8- ஓசூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரை இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ‘இளைய நிலா’ இசைக்குழுவின் சார்பில், புதிய இசைச் சங்கம் தொடக்க விழா சாந்தி நகரில் நடைபெற்றது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆதி வெங்கடா சலம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இசை சங்கத்தின் தலைவர் தில்லை ஆ. குமார் ஒருங்கிணைக்க, பகுதி வார்டு உறுப்பினர் இந்தி ராணி இசை சங்க அலுவலகத்தைத் திறந்து வைத்தார். எழுத்தாளர் மணிமேகலை மற்றும் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், கதிர்காமன், விஸ்வநாதன், முரளி, பாரதி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் அனைத்து குடியி ருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலை வர் துறை, அரிமா சங்க நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகி அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஓசூர் பகுதியில் நாதஸ்வரம், தபேலா உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் மூத்த கலை ஞர்களுக்குப் பொருள்கள் வழங்கி கௌர விக்கப்பட்டது. மேலும், ஆர்வம் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் முறையாக இசை மற்றும் இசைக்கருவிகளைக் கற்றுத் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இறுதியில், தலைவர் தில்லை ஆ. குமார் நன்றி தெரிவித்தார்.</p>
