ஏழை விவசாயியின் வீட்டை இடித்த அதிகாரிகள்! மறியலில் ஈடுபட்ட மக்களால் போர்க்களமானது கிராமம்!
24 May 2026, 2:19 am

ஏழை விவசாயியின் வீட்டை இடித்த அதிகாரிகள்! மறியலில் ஈடுபட்ட மக்களால் போர்க்களமானது கிராமம்!

கிருஷ்ணகிரி, மே 23- ஓசூர் வட்டம், பாகலூர் பகுதி பேரிகை சாலை லிங்கா புரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முனீஸ்வர் நகர் கிராமத்தில் சுமார் 75 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன.

ஒரு சில வீடுகளைத் தவிர இப்பகுதி யில் உள்ள அனைத்து வீடுக ளுமே மிகப்பழமையான குடிசை களாகவும், சிமெண்ட் சீட் வீடு களாகவுமே உள்ளன

. இக்கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் இதுவரை முறையான அடிப்படை மற்றும் சுகாதாரக் குடிநீர் வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மழை, வெயில் காலங்களிலும், எலி மற்றும் விஷப் பூச்சிகளின் தொல்லையாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இத்தகைய சிரமங்களால், பழைய வீடுகள் இருந்த அதே இடத்தில் கடந்த சில மாதங்களாக 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடன் வாங்கி, சிமெண்ட் கற்களால் சிறிய அளவிலான சீட் வீடுகளைக் கட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறையினர், போலீஸாருடன் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக இவர்களை வீடு கட்ட விடாமல் தடுத்து, வீடுகளை இடித்து விடுவதாக மிரட்டி வந்துள்ளனர்.

கடந்த 5-ஆம் தேதி அதிகாரிகள் இக்கிராம மக்களை எச்சரித்தபோது, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தலையிட்டு வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியது.

அப்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், வீடுகள் கட்டிக் கொள்ள அனுமதிப்பதோடு, வீட்டு மனைப் பட்டா வழங்கவும் நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றனர்.

ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள்: ஆனால், தந்த வாக்குறுதியை மீறும் வகையில், ஓசூர் வட்டாட்சி யர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஓசூர், பாகலூர் காவல் துறையினர் 30-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் ஜே.சி.பி. இயந்திரத்தை எடுத்துக்கொண்டு முனீஸ்வர் நகர் கிராமத்திற்கு திடீரென வந்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, சொன்னேகவுடா என்ற விவசாயி கட்டிக் கொண்டிருந்த சீட் வீட்டை அதிகாரிகள் இடித்துத் தரை மட்டமாக்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, மற்ற வீடுகளை இடிக்க விடாமல் தடுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் கிராமமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

தற்கொலை முயற்சி - தலைவர்கள் முற்றுகை: தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், ஒன்றியத் தலைவர் ராஜாரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நாக ராஜ்ரெட்டி, ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.தேவராஜ் மற்றும் விவசாயி கள் சங்க வட்ட நிர்வாகிகள் விரைந்து வந்து, அதிகாரிகளையும் போலீஸாரையும் தடுத்து நிறுத்தி னர்.

இதற்கிடையே, தனது வீடு இடிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி சொன்னேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் போலீஸார் உடனடியாகச் செயல்பட்டு அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் பணிந்தனர் போராட்டம் வாபஸ் தொடர்ந்து தலைவர்கள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “

ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மக்கள் வீடுகள் கட்ட அனுமதிக்க வேண்டும்; நிலத்தை வகை மாற்றம் செய்து ‘கல்லாங்குத்து புறம்போக்கு’ என்பதை ‘நத்தம் புறம்போக்கு’ என மாற்றி உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும்; இடிக்கப்பட்ட சீட் வீட்டை அதிகாரிகளே மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். தலைவர்கள் மற்றும் பொது மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்ற அரசு அதிகாரிகள், இடிக்கப்பட்ட வீட்டை அதே இடத்தில் மீண்டும் கட்டிக் கொடுப்பதாகவும், மற்ற வீடுகளைக் கட்டிக்கொள்ள அனு மதிப்பதோடு சில மாதங்களில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் போராட்டம் கைவிடப்பட்டது

. தங்களின் குடி யிருப்பு உரிமையைக் காத்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயி கள் சங்கத்திற்கு இக்கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.