கட்டுமானப் பணியில் விபத்து ஓசூரில் தொழிலாளர்கள்3 பேர் பலியான துயரம்!
5 Nov 2026, 10:53 pm

கட்டுமானப் பணியில் விபத்து ஓசூரில் தொழிலாளர்கள்3 பேர் பலியான துயரம்!

சென்னை, நவ. 5 -கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாட்டா காலணி உற்பத்தி ஆலையில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனவளைவு வடிவக் கூரைக்காக சுமார் 17 தொழிலாளர்கள் கான்கிரீட் போட்டுக்கொண்டிருந்தபோது, தாங்கி நிற்கும் ஜாக் ஒன்று நழுவியதால், கூரையின் சட்டகத்தின் பெரும் பகுதி இடிந்து, கான்கிரீட் பலகைகளும் இரும்புக் கம்பிகளும் தொழிலாளர்கள் மீது விழுந்தன. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுமார் 10 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி யிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.