கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்
21 Jan 2026, 3:58 pm

இரவு நேரக்கடைகளில் ஆய்வு!

தருமபுரி, ஜன.21- இரவு நேரங்களில் செயல்படும் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப்பொருட்களை பறி முதல் செய்து, அபராதம் விதித்தனர். துரித உணவு கடைகள், இரவு நேர சாலையோர உணவகங்களில், சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட் களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார், நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாது காப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்டோர் அடங் கிய குழுவினர், திங்களன்று இரவு தருமபுரி நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, பேருந்து நிலையப் பகுதி, ராஜகோபால் பூங்கா பகுதிகளில் செயல்படும் தள்ளுவண்டி கடைகளில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை பயன்படுத்து வது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட் டன. மேலும், சுகாதாரமின்மை குறைவாகவும், உணவு பொருட்களை முறையான பராமரிப்பின்றியும் வைத்தி ருந்ததாக 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, பி.ஆர்.சீனிவாசன் தெருவில் செயல்படும் ஒரு பழர சம் விற்பனை செய்யும் (ஜூஸ்) கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற் பனை செய்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயி ரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் கூறுகையில், வறுவலுக்கு பயன்படுத்தும் மீன், சிக்கன், பீப் போன்றவை புதியதாகவும், அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் பொருட்கள் உரிய தரத்துட னும் இருக்க வேண்டும். செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவை கூட்டுவதற்கான மோனோ சோடியம் குளுமேட் உப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிய பதிவுச் சான்றிதழ் பெற்று வணிகத்தில் ஈடுபட வேண்டும். உணவுப் பாது காப்புத் துறை விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை உதவியாளர் கைது

ஈரோடு, ஜன.21- அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலி யல் தொல்லையளித்த கால்நடை மருத்துவமனை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். அம்மாபேட்டை அருகே உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவர், அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் உள்ள அரசு கால்நடை மருத் துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகி றார். இவர் மது அருந்துவிட்டு கடந்த சில நாட்களாக வீட் டுக்குச் செல்லாமல் வெளியே சுற்றி வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பள்ளியி லிருந்து வீட்டுக்குச் சென்ற 5 ஆம் வகுப்பு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லையளித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையை கடந்து சென்ற புலி!

உதகை, ஜன.21- முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலத் திற்குட்பட்ட மசினகுடி பகுதியில் இரு, வேறு இடங்க ளில் சாலையை கடந்து சென்ற புலிகளை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். ‘மலைகளின் அரசி’ என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண் டுள்ளது. இந்த வனப்பகுதியானது யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல் வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வரு கிறது. சமீபகாலமாக முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலத்திற்குட்பட்ட மசினகுடி, மாயார், சிங் காரா, வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதியில் புலிகளின் நடமாட் டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், செவ் வாயன்று உதகை - மசினகுடி சாலை மற்றும் மாயார் - ஆனைக்கட்டி செல்லும் சாலையில் உலா வந்த இரண்டு புலிகள் கம்பீரமாக சாலையை கடந்து சென் றன. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணி கள், தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்த னர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்க ளில் வைரலாகி வருகிறது. மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள், தங்க ளது வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர்.

பெரியார் அறிவுலகம்: பிப்.10-க்குள் பணிகள் நிறைவடையும்!

கோவை, ஜன.21– கோவையில், ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் ‘பெரி யார் அறிவுலகம்’, பிப்ரவரி 10-க்குள் பணிகள் நிறை வடையும் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். கோவை மாநகராட்சி சிறைச்சாலை மைதானம் அருகில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவி யல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புதனன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் ரூ.245 கோடி ரூபாய் கட்டிட மதிப்பீடு மற்றும் ரூ.50 கோடி புத்தக மதிப்பீடு என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் இந்த மையம் அமையவுள்ளது. தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ‘பெரியார் அறிவுல கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில், 400 பேர் அமரக்கூடிய கருத்தரங்கம், டிஜிட்டல் நூலகம், தமிழ் மற்றும் ஆங்கில நூல் பிரிவுகள் அமையவுள்ளன. சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை அடுக்கும் பணிகள் தற் போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என உறுதி அளித்தார். மேலும், 13 மாதங்களிலேயே இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டுள்ளதாகவும், தரமான பொருட்களைக் கொண்டு கட்டு மானப் பணிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவ தாகவும் அவர் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விரை வில் இந்த மையத்தை நேரில் திறந்து வைப்பார். தொடர்ந்து பேசிய அமைச்சர், கோவை மேற்குப் புற வழிச்சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக வும், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ள நிலை யில், மீண்டும் அதற்காகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு

உடுமலை, ஜன.21- உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செல்லப்பம்பா ளையம் ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பதில் முறை கேடுகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்னறு புகார் அளித் துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப் பம்பாளையம் ஊராட்சியில் சின்னப்புதூர் கிராமம் சம்ப் முதல் செல்லப்பம்பாளையத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டி வரை குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகி றது. 4 இன்ச் பிவிசி குழாய் அமைப்பதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதியில் வேலை செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 4 இன்ச் குழாய்க்கு பதில், தற்போது 3 இன்ச் பிவிசி குழாய் போடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இந்த முறை கேடு குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.

திருப்பூரில் 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.4.80 லட்சம் அபராதம் விதிப்பு

திருப்பூர், ஜன.21- திருப்பூரில், மொத்த விற்பனை கடைகளில் ரகசிய அறை யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.5 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரி கள் பறிமுதல் செய்து, 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 20க்கும் மேற்பட்ட அதி காரிகள் குழுவினர் மாநகர் பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அரிசிக்கடை வீதி, கேஎஸ்சி பள்ளி வீதி, புதுமார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மொத்த விற்பனை கடைக ளில் ஆய்வு செய்த போது, அங்கு ரகசிய அறைகள் அமைக்கப் பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 டன் அளவி லான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.4.80 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஒரே நாளில் அதிகாரிகள் திடீர் ஆய்வின் மூலம் 2.5 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருப்பூர், ஜன.21- காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற் றது. காங்கேயத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு காங்கேயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவ சாயிகள், 1,424 கிலோ கொப்பரையை (தேங்காய் பருப்பு) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக ரூ.185 க்கும், குறைந்தபட்சமாக ரூ.135 க்கும், சராசரியாக ரூ.180 க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த மாக ரூ.2.58 லட்சத்திற்கு விற்பனை ஆனது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

கேள்விகுறியாகும் சித்த மருத்துவப் பயனாளிகள் நிலை?

திருப்பூர், ஜன.21- திருப்பூர் மாவட்டத்தின் மையப்பகுதி யில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்த மாவட்ட சித்த மருத்துவமனை, புதிய கட்டி டம் கட்டப்படாமலே இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு நோய்களுக்குத் தொடர் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நிலைமை கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய பேருந்து நிலையம் எதிரே, தாராபு ரம் சாலையில் மாவட்ட சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில், தினமும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என 500க்கும் மேற்பட் டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டி ருந்தது. அதில் நித்தியகல்யாணி, ஆவா ரம்பூ, நொச்சி, செம்பருத்தி, சங்குப்பூ, பவ ளமல்லி, கற்றாழை, ஆடாதோடை, கொடி கல்லி, தழுதாழை, நெல்லிக்கனி, மருதாணி, அருநெல்லி, நிலவேம்பு, மலைவேம்பு, அத்தி, சீனிப்பழம், இலுப்பை, வேம்பு உள் ளிட்ட பல்வேறு அரிய வகை மூலிகை வளர்க் கப்பட்டு வந்தன. இந்த மூலிகைகள் பல நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. தற்போது, திருப்பூர் மாநகராட்சி நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் இருந்த சித்த மருத்துவமனையின் இடம், பார்க்கிங் பகு தியாக மாற்றப்பட உள்ளதால், அதை இட மாற்றம் செய்யும் முன்னதாகவே மூலிகைத் தோட்டம் அழிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பெரியாச்சிபாளையம் பகுதி யில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில், சித்த மருத் துவப் பிரிவுக்குத் தனி இடம் கோரப்பட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை நிர்வாகம், நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருந் தது. அதற்குப் பதிலாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே 18.5 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தாலும், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்ப டவில்லை. இந்நிலையில், சித்த மருத்துவ மனையை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இடிக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து எடுக் கப்பட்ட பொருட்கள், 25 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தில் தற்காலிகமாக வைக் கப்பட்டுள்ளன. இதனால் உள் நோயாளிகள் பிரிவு செயல்பப்பாட்டில் இல்லாமல் உள் ளது. சிகிச்சைக்காக முக்கிய பங்காற்றிய மூலிகைத் தோட்டமும் இப்போது அழிக்கப் பட்டுள்ளது. மருத்துவப் பயனாளிகள் சிலர் இது குறித்து தெரிவிக்கையில், மாவட்டத்தின் நடு வில் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு, பல் வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி இருக்கிறது. இப்போது மருத்துவமனை இருக்குமா? இருக்காதா? என்றே தெரியவில்லை. பலர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறோம். எங்க ளுக்கான மாற்று ஏற்பாடுகள் தெளிவாக தெரியவில்லை. மூலிகைத் தோட்டம் அழிக் கப்பட்டது பெரிய இழப்பு. தற்போது இந்த மருத்துவமனை சேவை தடைபடும் நிலை உருவாகியுள்ளது என கவலையுடன் தெரி வித்தனர்.

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையர் கைது உதகை, ஜன.21- கட்டிடம் கட்டும் அனுமதிக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் குன்னூர் நகராட்சி ஆணை யர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி ஆணைய ராக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இளம்பரிதி என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கோத்தகிரிக்கும், கூடுதல் பொறுப் பாக நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவர் பொறுப்பேற்ற முதல் நகராட்சியில் கட்டிட அனு மதிக்கு பெருமளவு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கோத்தகிரி மார்கெட் பகுதி யில் இருசக்கர வாகன உதிரிபாகனங்கள் கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர், தன்னுடைய பழைய கட்டி டத்தை இடித்துவிட்டு, 2500 சதுரடியில் புதிதாக கட்டிடம் கட்ட விண்ணப்பித்து டிடிசிபி அனுமதி வாங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து கோத்தகிரி நக ராட்சியில் அனுமதி வாங்க நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டபோது, அவர் அனுமதி கொடுக்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.ஒரு லட்சத்தை குறைத்துக் கொண்டு மொத்தமாக ரூ.5 லட்சம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாகவும், முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தால் கட்டிட அனுமதிக்கான பணிகளை தொடங்கி விடுவதாகவும் ஆணையர் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ரமேஷ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்தை ரமேஷ், குன்னூர் நகராட்சி ஆணையரிடம் வழங்க அவர் தங்கியுள்ள முகாம் அலுவலகத்திற்கு செவ் வாயன்று சென்றுள்ளார். அப்போது ஆணையாளர் இளம்பரிதி உத்தரவின் பேரில், நகராட்சி உதவியா ளர் விக்னேஷ் என்பவர் ரமேஷிடமிருந்து பணத்தை வாங்கி, இளம் பரிதியிடம் கொடுத்தபோது இருவரை யும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவு மாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வாளர் சண்முக வடிவு தலைமையிலான போலீசார்ர் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து, ஆணை யரிடமிருந்த லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர்.

பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

கோவை, ஜன.21– ஊத்துக்குளி - திருப்பூர் இடையே ரயில் தண்டவாள பரா மரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய் யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்க ளில் மரக்கட்டைகளை மாற்றும் ‘ஸ்லீப்பர் புதுப்பித்தல்’ (Sleeper Renewal) பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வா கம் திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக, வரும் 23, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலு வலர் ஜி. மாரிய மைக்கேல் தெரிவித்துள்ளார். அதன்படி, திருச்சிராப்பள்ளியில் இருந்து மதியம் 1.00 மணிக்குத் தாலக் காடு டவுன் நோக்கிப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16843), ஜனவரி 23, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி ரயில் நிலையத்துடன் பாதியிலேயே நிறுத்தப் படும். தண்டவாள பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்த ரயிலானது ஊத்துக்குளியில் இருந்து பாலக் காடு டவுன் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக, அதன் வழக்கமான நிறுத்தங்களுடன் இயக்கப்படும். அதேபோல், ஜனவரி 26-ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு, 27-ஆம் தேதி சேலம் மற்றும் கோவை வழியாக எர்ணா குளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22815), தண்டவாளப் பணிகள் காரணமாக வழியிலேயே சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.