முந்தய பக்கம்

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் போராட்டம்

17 Jul 2026, 11:24 pm
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் போராட்டம்
<p><strong>தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் போராட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 17 - தமிழக தோட்டக்கலை துறையுடன் வேளாண் உழவர் நலத்துறையை இணைக்கும் யு ஏ டி டி 2.O திட்டத்தை கைவிடக் கோரி, தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தோட்டக்கலை துறையுடன் உழவர் நலத்துறை இணைக்கப்படும்போது தோட்டக்கலைத்துறை உதவி அலு வலர்கள் ஏற்கனவே உள்ள பணிகளு டன் வேளாண் உழவர் நலத்துறையின் பணிகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படும் என்பதால் பணி சுமை அதி கரிக்கும், தோட்டக்கலை துறை தொழில் நுட்பம் வேறு, வேளாண் துறை தொழில்நுட்பம் வேறு என்பதால் உற்பத்தி பாதிக்கபட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற் பட்டு விவசாய தொழில் பாதிக்கப் படும் என்றும் தங்களது பணி மூப்பு பாதிக்கப்படும் என்பதால் உடனடி யாக திட்டத்தை கைவிட கோரி முழக் கங்களை எழுப்பினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி. முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில், மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் தோட்டக்கலை உதவி இயக்குநர் சி.ராஜேஸ்கண்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் வி. ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலா ளர் முருகன் வாழ்த்தி பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram