ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: ஈரான் முடிவை ஏற்க டிரம்ப் மறுப்பு!
26 Sept 2026, 11:41 pm

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: ஈரான் முடிவை ஏற்க டிரம்ப் மறுப்பு!

நியூயார்க், செப். 26 -ஈரான் கோரியவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை 7 நாட்களுக்குள் மீண்டும்திறப்போம்; அதற்கான திட்டம் ஒன்றை அமெரிக்காவிடம் கொடுத்துள்ளோம் என அந்நாட்டு வெளியுறவுத்துறைஅமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருந்த நிலையில், ஈரானின் முடிவை டிரம்ப் நிராகரித்து விட்டதாக ‘வால்ஸ்ட்ரீட்’ ஆங்கில ஏடு தெரிவித்துள்ளது.நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அராக்சி, அமெரிக்காவிடம்,“’ஒருதெளிவான 7 நாள் திட்டத்தை’ கத்தார் மூலமாக வழங்கியுள்ளோம்; இந்த திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்ட உடனேயே இந்த 7 நாள் காலக்கெடு தொடங்கும்; அந்த காலத்திலேயே நீரிணை திறக்கப்படும்;அமெரிக்கா செய்ய வேண்டிய எந்த நடவடக்கைகளும் புதியவை அல்ல; ஏற்கெனவே, ஜூன் மாதம் இரு நாடுகளின் னாலே போதுமானது” என்று கூறியிருந்தார்.மேலும், “எந்த விதமான வற்புறுத்தலையோ, அச்சுறுத்தலையோ, மிரட்லையோ ஈரான் ஏற்காது; மிரட்டலுக்கும் நெருக்கடிகளுக்கும் பணிந்து ஈரான் தனது இறையாண்மை உரிமைகளைவிட்டுக்கொடுக்காது; ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் அமெரிக்காவிற்கு தீவிர விருப்பம் இருக்குமேயானால், அதனை இப்போதே முன்னெடுக்க ஈரான் அனைத்து வகையிலும் தயாராகவே உள்ளது என்பதைஎன்னால் சொல்ல முடியும்; முன்னதாக, ஒப்பந்தத்தை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும்; இப்போது முடிவு அமெரிக்காவின் கையில் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.இந்நிலையில் நீரிணையை திறக்கஅமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் பூர்த்தி செய்யும் என்பதில் டிரம்ப்புக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது; நவம்பர் மாதம்அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஈரான் மீது தொடங்குவதே சாத்தியமானது என அவர் தனது அதிகாரிகளிடம் கூறியதாகவும் பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தெரிவித்துள்ளது.லெபனான் உட்பட மேற்காசியப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஜூன் 18அன்று, அமெரிக்காவும் ஈரானும்கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் கீழ், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் (ஆகஸ்ட்17 உடன் முடிந்த காலக்கெடு) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதல் காரணமாகஇறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை முடங்கியது குறிப்பிடத்தக்கது.