ஹோம்பவுண்ட் Homebound: நெடுங்காலமாக நோயால் பாதிக்கப்பட்ட நாட்டின் உண்மைப் பிரதிபலிப்பு
8 Dec 2025, 4:39 pm
<p><strong>ஹோம்பவுண்ட் Homebound: நெடுங்காலமாக நோயால் பாதிக்கப்பட்ட நாட்டின் உண்மைப் பிரதிபலிப்பு</strong></p>
<p>நீரஜ் கய்வால் இயக்கிய “ஹோம் பவுண்ட்” எனும் திரைப்படம் நெட்ஃ பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம். நவீன இந்திய சமூகத்தின் நிழலும் சாதிச் சிக்கல்களையும், ஆழமான விரோதங் களையும், வர்க்கப் பிளவுகளையும், அர சியல் சீர்கேடுகளையும் ஒரு கண்ணாடி யாகப் பிடித்துப் பிரதிபலிக்கும் சக்தி வாய்ந்த கலைப்படைப்பு. 2020-இல் உலகைப் பிடித்தாட்சி செய்த கொரோனா வைரஸ் மற்றும் அதன் லாக்டவுன் என்பது வெறும் இத்திரைப்படத்தின் பின்புலம் மட்டுமல்ல, அது ஒரு ‘லென்ஸ்’ போல் பயன்படுத்தப்பட்டு, இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேரூன்றியுள்ள சாதி வெறுப்பு, இந்துத்துவ அரசியல் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்கள் போன்ற தீர்க்கப்படாத நோய்களை வெளிக்காட்டியுள்ளது. அடிப்படைக் கதையும், அதன் பின்னணியும் இந்தப் படத்தின் கதை உத்தரபிர தேசத்தின் தேவாரி கிராமத்தைச் சேர்ந்த, தலித் சமூகத்தைச் சேர்ந்த சந்தன் (விஷால் ஜேத்வா) மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஷோயிப் (இஷான் கட்டர்) ஆகிய இரு குழந்தைப் பருவ நண்பர்களின் பிணைப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இது உண்மைக் கதை, 2020 மார்ச் 15-இல் இணையத்தில் வைரலான ஒரு புகைப்படத்தில் இருந்து உருவானது, அதில் கொரோனா லாக்டவுன் காலத்தில் வீடு திரும்பும் பயணத்தில் அமித் குமார், முகமது சாயுப் பின் மடியில் மூச்சுத் திணறி இறந்த நிலையில் காணப்பட்டார். இந்தப் புகைப்படம் இந்திய மனங்களின் இதயத்தை உலுக்கியது. இந்தச் சம்ப வத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை யாளர் பஷாரத் பீர் ஆழமாக ஆராய்ந்து கட்டுரையாக வெளியிட்டார். அதையடிப் படையாகக் கொண்டதே இந்தப்படம். இந்தியாவின் இரண்டு முகங்களை வெளிப்படுத்தும் குடும்பக் கதைகள் இப்படம் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் போராட்டத்தை இரண்டு வெவ்வேறு, ஆனால் இணைந்த கதைகள் மூலம் சித்தரிக்கிறது. சந்தனின் குடும்பம் சாதி ஒடுக்குமுறை யின் முகம்: சந்தனின் குடும்பக் கதை, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை எவ்வாறு தலைமுறைகளாகக் குடும்பங் களை நசுக்குகிறது என்பதைத் திறந்து காட்டுகிறது. அவனது புத்திசாலித் தனமான தங்கை, குடும்பத்தின் நிதி நெருக்கடியால் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை தகர்ந்து, உள்ளூர் பள்ளியில் பணியாளராக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறாள். இதிலும் மிகவும் வேதனையானது, அவனது தாய் ஒரு பள்ளி அங்கன்வாடியில் சமையல் வேலை செய்கிறார், ஆனால் அவர் தலித் என்பதற்காகவே, உயர் சாதி பெற்றோர்கள் அவர் தயாரித்த உணவைத் தங்கள் குழந்தைகள் உண்ணக் கூடாது என வாதிடும் காட்சி, சட்டப்பூர்வமான உரிமைகள் புறக்கணிக்கப்படும் போது நிலவும் சமூக நியாயமின்மையை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஷோயிப்பின் குடும்பம் மத அடையாள அரசியலால் பலியாக்கப்படும் இந்தியாவின் இன்னொரு கண்: மறுபக்கம், ஷோயிப்பின் குடும்பம். ஒரு முஸ்லிம் இளைஞன் தற்போதைய அதிதீவிர இந்துத்துவ அரசியலில் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டுகிறது. திறமையான விற்பனை யாளரான அவன், தனது மதத்தின் காரணமாக வேலையில் ஏளனத்திற்கும், பாகுபாட்டிற்கும் உள்ளாகிறான். என்ஆர்சி (தேசியப் பதிவேடு) மற்றும் சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்) போன்ற அரசியல் சூழல்கள், இஸ்லாமியக் குடும்பங்களின் அடையாளத்தைச் சந்தேகத்தின் கண்ணால் பார்க்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமூகத்திற்குள் இருக்கும் வர்க்கப் பிளவு: சந்தனும் - சுதாவும் இக்கதையில் ஒரு முக்கியமான உருவகமாக சுதா (ஜான்வி கபூர்) தோன்றுகிறாள். அவளும் ஒரு (புத்த மதம்) தலித் பெண் தான். ஆனால், கல்வியறிவு மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் வசதி பெற்ற அவளுக்கும், கிராமப்புற வறுமையில் வாழும் சந்தனுக்கும் இடையே உள்ள வர்க்கப் பிளவைப் படம் சித்தரிக்கிறது. கல்வியே சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஒரே வழி என்று நம்பும் சுதா, சந்தனைக் கல்லூரி யில் சேர ஊக்குவிக்கிறாள். ஆனால், சந்தனின் பொருளாதார நிலைமை அதை ஒரு சாத்தியமற்ற கனவாக மாற்றுகிறது. இந்த உரையாடல், ஒரே சமூகத்திற்குள் கூட பொருளாதாரம் எவ்வாறு வெவ்வேறு யதார்த்தங்களை உருவாக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசின் தோல்வியும், புலம்பெயர் தொழிலாளர்களின் பயணமும்: படத்தின் மிகச் சக்திவாய்ந்த கருத்து, கொரோனா பொதுமுடக்கத்தை அரசு எவ்வாறு மோசமாக நிர்வகித்தது என்பதை வெளிப்படுத்துவதாகும். திடீர் பொது முடக்கம் வசதி படைத்தவர்களுக்கு வீட்டில் இருந்து கைதட்டும் வாய்ப்பாக இருந்தது. ஆனால், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, வசிப்பிடம், போக்குவரத்து எதுவும் இன்றி, நகரங்களில் சிக்கி, தங்கள் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே திரும்பும் ஒரு பேரழிவு நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தை நினைவுகூருகிறது. சந்தன் கடுமையான வெயிலில் “ஹீட்ஸ்ட்ரோக்” (heatstroke) அடைந்த போது, அதைக் கொரோனா என்று பயந்து, லாரியில் இருந்து அவனையும், ஷோயிப்பையும் வீசி எறியும் காட்சி, அந்தக் காலகட்டத்தின் கொடூரமான அறியாமை மற்றும் தவறான நிர்வாகத்தின் உச்ச மாக நிற்கிறது. சந்தன் வைரஸால் இறக்க வில்லை, அரசின் தோல்வியால் இறக்கிறான் – இந்த வரியே படத்தின் மையச் செய்தியைத் தாங்கியுள்ளது. இது ஒரு நினைவுகூரல்: “ஹோம்பவுண்ட்” என்பது வெறும் திரைப்படம் அல்ல, இது சமூக அவ லத்தின் ஆவணம் மற்றும் ஒரு நினைவு கூரல். இது நமது சமூகத்தின் வேர்களான சாதி, மத, வர்க்கப் பாகுபாடுகள் எவ்வாறு ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளையும், கண்ணியத்திற்கான தேடலையும் நசுக்குகின்றன என்பதைக் கடுமையாக விமர்சிக்கிறது. அமித் குமார் மற்றும் முகமது ஷோயிப்பின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இத்திரைப்படத்தின் காட்சிகள் நாம் வாழும் சமூகம் குறித்து நமக்கு நினைவூட்டுகிறது. இதன் வசனங்கள் கேட்காத ஓசைகளை அழுத்தமாக ஒலிக்கிறது. இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மேலும் ஒரு மனிதனின் கண்ணியம் என்றால் என்ன? அதை அடைய ஒரு அமைப்பு எவ்வாறு தடையாக நிற்கிறது என்பதை நினைவூட்டு கிறது. “ஹோம்பவுண்ட்” ஒரு சக்தி வாய்ந்த, உணர்ச்சிமயமான மற்றும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம். - லிவின்</p>
