தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

10 Dec 2025, 4:08 pm
சென்னை விரைவு செய்திகள்

மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி

திருவள்ளூர், டிச.10: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு வள்ளலார் நகரை சேர்ந்த தர்மேந்திரன் (45).இவர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார்.  இவரது நண்பர் பால் சிங். இவர் வேப்பம்பட்டு, பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் ஜோதிட கற்கள் விற்பனை செய்யும் கடையை திறப்பதற்காக தயார் செய்து வருகிறார். இதற்காக தர்மேந்திரன் அந்த கடைக்கு விளம்பர போர்டு வைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, விளம்பர போர்டு மாட்டுவதற்காக மேலே தூக்கும் போது மேல் பகுதி மின்சார வயரில் பட்டதால் மின்சாரம் தாக்கி தர்மேந்திரன் தூக்கி வீசப்பட்டார். திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

45வயது பெண்ணுக்கு  இதயத்தில் கட்டி அகற்றல்

சென்னை, டிச.10-  இந்தியாவில் முதல் முறையாக நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக 45வயது பெண்ணுக்கு இருதயத்தின் இடது கீழறையில் இருந்த அரிதான கட்டியை சென்னை சேர்ந்த மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.  மார்பெலும்பைப் பிளக்காமல், எண்டோஸ்கோப்பி முறையிலான நுண்துளை அறுவை சிகிச்சையில் இதை மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.  இந்த பெண்ணுக்கு, ரத்தத்தை உந்தித் தள்ளும் பிரதான அறையில் 1.6 × 1.5 செ.மீ அளவிலான கட்டி கண்டறியப்பட்டது. இத்தகைய கட்டி (2 முதல் 3 கோடி மக்களில் ஒருவருக்கே ஏற்படும்) பொதுவாக திறந்தநிலை இருதய அறுவை சிகிச்சை மூலமே அகற்றப்படும். இதற்கு மாற்றாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவு  தலைவர் டாக்டர் வி.வி. பாஷி வழிகாட்டுதலில் டாக்டர் ஏ. முகமது இப்ராஹிம் தலைமையிலான குழுவினர், விலா எலும்புகளுக்கு இடையே சிறு துளையிட்டு, கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். இந்த நவீன சிகிச்சையால், நோயாளிக்கு பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.இதற்காக சுமார்6 மணிநேரம் இதய செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தெரு நாய்களுக்கு  மாணவர்கள்  உணவளிக்க அரசு தடை!  தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

சென்னை, டிச. 10 – தமிழ்நாட்டில் தெரு நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. ரேபிஸ் நோய் பரவாமல் இருக்க கால்நடைத் துறை சார்பில் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதும், கருத்தடையும் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், ரேபிஸ் பாதிப்பு அதிகரிப்பதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி குறித்து அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதையோ அல்லது உணவளிப்பதையோ தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மேலும், நாய் கடிக்கு ஆளானால் தயக்கமின்றிப் பெற்றோரிடம் அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்கவும், பள்ளியைச் சுற்றி நாய்கள் இருந்தால் உள்ளாட்சி அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் ஒரு நோடல் அதிகாரியை நியமித்து, நாய்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுத் தேதி மாற்றம்!

சென்னை, டிச.10- மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper) தகுதிகாண் தேர்வு (Competency Examination) நடைபெறும் தேதிகள் நிர்வாகக் காரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வுகள், தற்போது டிசம்பர் 27, 2025 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்வானது கீழ்க்கண்ட அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலமாகவே தேர்வு தொடர்பான விவரங்களையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் (Hall Ticket) பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.