தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Nov 2025, 2:28 pm
சென்னை விரைவு செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, நவ.28- ‘டிட்வா’ புயல் காரணமாக, அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் (நவ.29) சனிக்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படு கிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை:  ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டு சிறை சென்னை, நவ.28- சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த வர் 43 வயது உள்ள ரயில்வே ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பெற்ற மகள் என்றும் பாராமல் ரயில்வே ஊழியர் 7ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதுகுறித்து திரு வொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடி னார். வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சாட்சி யங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ரயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழனன்று தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார். இதை யடுத்து காவல்துறையினர் ரயில்வே ஊழியரை புழல் சிறையில் அடைத்தனர்.

100 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னை, நவ. 28- வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதையடுத்து விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி மீண்டும் 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி (MCFT) கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் வெள்ளியன்று  காலை 6 மணி நிலவரப்படி 2,823 MCFT நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 85% ஆகும். 21.2 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் நீர்மட்டம் தற்போது 19.05 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 405 கன அடி நீர் வந்துகொண்டிருக்க, சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரி யின் கொள்ளளவைக் குறைத்து, வெள்ளம் தாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டில் 5வது முறையாக 100 கன அடி உபரிநீர் திறக்கப் பட்டுள்ளது.  புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே சென்று எண்ணூர் கடலில் கலக்கும். இதன் காரணமாக, கரையோரப் பகுதி களான நாரவாரி குப்பம், வடகரை, கிராண் ட்ன்லை, சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார். படிப்படியாக உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட உள்ள தாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  இன்று வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள்

சென்னை, நவ. 28 – வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெறும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணை யாளருமான ஜெ.குமரகுருபரன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். படிவங்களை பூர்த்தி செய்வதிலும், வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்க ளுக்கு தீர்வு காணும் வகையிலும் நவ.18-25 வரை அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைத்து, பெரும்பாலான படிவங்கள் பெறப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெற குறைந்த நாட்களே உள்ளன. இந்நிலையில், சிறப்பு நடவடிக்கையாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படி வங்களை  மீளப் பெற அனைத்து வாக்குச்  சாவடி  மையங்கள், அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், பன்முக வளாகக் குடியிருப்புப் பகுதிகளில் வாக்காளர் சிறப்பு  உதவி மையம் செயல்படும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த மையம் செயல்படும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்ட கணக்கீட்டு படி வங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கி னால் மட்டுமே வாக்களர்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். எனவே, இறுதிநாள்வரை காத்திராமல் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விரைந்து வழங்க வேண்டும்.  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறவில்லை எனில்  1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.