முந்தய பக்கம்

திருப்பூரில் ஹோலி கொண்டாட்டம்

4 Mar 2026, 5:01 pm
திருப்பூரில் ஹோலி கொண்டாட்டம்
<p><strong>திருப்பூரில் ஹோலி கொண்டாட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 4- திருப்பூரில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் புத னன்று கோலாகலமாக ஹோலிப் பண்டிகையை கொண்டா டினர். &nbsp;திருப்பூரில் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்க ணக்கான மக்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும், &nbsp;மாநகரின் முக்கிய வணிகப் பகுதிகளான காதர்பேட்டை, பி.என்.ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி, புது மார்க்கெட், &nbsp;அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளையும் நடத்தி &nbsp;வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் &nbsp;தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழு வதும் புதனன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் உள்ள வட மாநிலங் களை சேர்ந்தவர்கள் வண்ணப்பொடிகளை வீசி &nbsp;ஹோலிப் பண் டிகையை கொண்டாடினர். மேலும், சொந்த ஊரிலிருந்து பல &nbsp;நூறு கிலோ மீட்டர் கடந்து வந்தாலும் திருப்பூரில் தங்களின் &nbsp;கலாச்சார திருவிழாவை எந்த தடையுமின்றி கொண்டாடி யது தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக வடமாநில &nbsp;வணிகர்களும் தொழிலாளர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித் தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram