தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்வரத்து 6,000 கன அடியாகக் குறைவு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி!

9 Aug 2026, 1:04 am
நீர்வரத்து 6,000 கன அடியாகக் குறைவு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி!

நீர்வரத்து 6,000 கன அடியாகக் குறைவு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி, ஆக.8-தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்ததைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சனியன்று பரிசல் இயக்கவும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுவை அடைந்ததை அடுத்து ஒகேனக்

கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த புதன்கிழமை வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை 18,000 கன அடியாகவும், வெள்ளியன்று காலை 15,000 கன அடியாகவும் குறைந்தது. மேலும், மாலை முதல் நீர்வரத்து மேலும் சரியத் தொடங்கி, சனியன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,000 கன அடியாகக் கடுமையாக சரிந்துள்ளது.

முன்னதாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த நான்கு நாட்களாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளதால், சனியன்று பரிசல் இயக்க தொழிலாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஆற்றில் இறங்கி குளிக்கவும், பரிசலில் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் வணிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.