முந்தய பக்கம்

களைகட்டிய ஒகேனக்கல் சுற்றுலாத் தலம்!

5 Oct 2026, 1:12 am
களைகட்டிய ஒகேனக்கல் சுற்றுலாத் தலம்!
<p><strong>களைகட்டிய ஒகேனக்கல் சுற்றுலாத் தலம்!</strong></p><p>தருமபுரி அக்.4-பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவதால், ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில்குவிந்தனர்.தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே, பள்ளிகளுக்கு காலாண்டு முடிவதால், ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக குடும்பத்துடன் பரிசல் சவாரி செய்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram