தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒகேனக்கல் சுற்றுலா தொழிலாளர்கள் போராட்டம் அடிப்படை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடுக!

7 Oct 2026, 8:34 pm
ஒகேனக்கல் சுற்றுலா தொழிலாளர்கள் போராட்டம் அடிப்படை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடுக!

ஒகேனக்கல் சுற்றுலா தொழிலாளர்கள் போராட்டம் அடிப்படை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடுக!

தருமபுரி, அக். 7ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திலுள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் சமையல் தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பென்னாகரம் ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு புதனன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கலுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம்,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்த சுற்றுலாத் தலத்தை நம்பி 500 பரிசல் ஓட்டுநர்கள், 400 சமையல் தொழிலா ளர்கள், 400 மசாஜ் தொழிலாளர்கள், 200 மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள், மீன் வியாபாரிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்வாழ்ந்து வருகின்றனர்.

கோரிக்கைகள்

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பரிசல்இயக்கத் தடை விதிக்கப்படுவதால், பரிசல் ஓட்டுநர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்; அனைத்து சுற்றுலாத் தொழிலாளர்களையும் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவேண்டும். மேலும், ஒகேனக்கல்சுற்றுலாத் தலத்தில் தொழிலாளர் களுக்குக் குடிநீர், ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், சமையல் தொழிலாளர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கவேண்டும், மசாஜ் தொழிலாளர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிஐடியு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குச் சங்கத்தின் தலைவர் சி. ராஜி தலைமை வகித்தார்; நிர்வாகி கே. வரதன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் சி. நாகராசன் சிறப்புரை யாற்றினார்.சமையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கல்யாணி, செயலாளர் வெங்கட்டம்மாள், பொருளாளர் கவிதா, பரிசல் இயக்கும் தொழிலாளர் சங்கச் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் பெருமாள், மசாஜ்தொழிலாளர் சங்க நிர்வாகி முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.