ஒகேனக்கல் சுற்றுலாத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக! சிஐடியு தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
22 Sept 2026, 9:06 pm

ஒகேனக்கல் சுற்றுலாத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக! சிஐடியு தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.22-ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன்பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல், ‘தென்னகத்தின் நயாகரா’ என்றழைக்கப்படுகிறது. இங்கு காவிரி ஆற்றில் அமைந்துள்ள அருவியில் குளிப்பதற்கும், பரிசலில் பயணம்செய்வதற்கும் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பி 500 பரிசல் பரிசல் ஓட்டுநர்கள், 400 சமையல் தொழிலாளர்கள், 400 மசாஜ் தொழிலாளர்கள், 200 மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள், மீன் வியாபாரிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறுதொழில்களில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிப்பு

காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில், பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து, சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பரிசல் இயக்கத் தடை விதிக்கப்படும்காலங்களில் பரிசல் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல் ஓட்டுநர்களின் வாரிசுகளுக்குமுன்னுரிமை அடிப்படையில் பரிசல் ஓட்டுவதற்கான உரிய உரிமங்களை வழங்க வேண்டும். அனைத்து சுற்றுலா தொழிலாளர்களையும் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாக உள்ளன.

அடிப்படை வசதிகள்ஏற்படுத்த கோரிக்கை

அதே போல ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் தொழிலாளர்களுக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்காக ஆண், பெண் கழிப்பறைகள், குடிநீர், வாகன

நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமையல் தொழிலாளர்களுக்காக சமையல் கூடம் அமைத்து, புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும். மேலும், ஒகேனக்கலில் செயல்பட்டு வரும் பரிசல் துறைகளுடன் ஊட்டமலை பரிசல் துறையையும் திறக்க வேண்டும். பரிசலில் பயணம் செய்யும்சுற்றுலாப் பயணிகளுக்கு தரமானஉயிர்காக்கும் கவசங்கள் (லைப் ஜாக்கெட்) வழங்க வேண்டும். சமையல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடிப்படைவசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாற்று பரிகார நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் செவ்வாயன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2,000க்கும் மேற்பட்டோர்

ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு தலைவர் சி.ராஜி தலைமை வகித்தார். நிர்வாகி கே.வரதன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர்சி.நாகராசன், மாவட்டத் தலைவர் சி.கலாவதி, இணைச்செயலாளர் ஏ.

சேகர், துணைத்தலைவர் சி.அங்கம்மாள், எல்பிஎப் தலைவர் குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.சமையல் தொழிலாளர் சங்கத் தலைவர் கல்யாணி, செயலாளர் வெங்கட்டம்மாள், பொருளாளர் கவிதா, பரிசல் இயக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் பெருமாள், மசாஜ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த முருகேசன், ஹரி, சக்திவேல், மீன்பிடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், முருகானந்தம் உள்ளிட்டோர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக, கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையெட்டி, ஒகேனக்கல் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. சமையல்

தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டுனர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், ஹோட்டல்உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள்,தங்கும் விடுதி உரிமையாளர்கள் என2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.