முந்தய பக்கம்

போதைப்பொருளுக்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு

22 May 2026, 11:33 pm
போதைப்பொருளுக்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு
<p><strong>போதைப்பொருளுக்கு எதிராக போலீசார் விழிப்புணர்வு</strong></p><p>தருமபுரி, மே 22- ஒகேனக்கல் பகுதியில் போதைப்பொருட்க ளுக்கு எதிராக காவல் துறையினர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி, ஒகேனக்கல் காவல் எல் லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒகேனக்கல் பேருந்து நிலையம், பரிசல் துறை, அருவிக்கு செல்லும் நடை பாதை, ராணிப்பேட்டை, ஊட்டமலை மற்றும் கூத்தப் பாடி அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, யாரே னும் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட் டாலோ, போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு, சூதாட்டம், பெண்களுக்கு எதிரான குற் றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு தொடர்பு எண்கள் அடங் கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram