தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊட்டமலை பரிசல் துறையை திறந்து பரிசல் இயக்க பரிசல் ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

29 Sept 2026, 2:09 am
ஊட்டமலை பரிசல் துறையை திறந்து பரிசல் இயக்க பரிசல் ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

ஊட்டமலை பரிசல் துறையை திறந்து பரிசல் இயக்க பரிசல் ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, செப். 28-ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஊட்டமலை பரிசல் துறையை மீண்டும் திறந்து, அங்கு பரிசல் இயக்க மாவட்டநிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பரிசல்ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக காவிரி ஆற்றில் பரிசல் சவாரி உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மற்றும் ஆற்றின் பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு,அவ்வப்போது பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இதனால் பரிசல் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஆற்றின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து உள்ளிட்ட நிலவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பான சூழல் உள்ள பகுதிகளில் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, ஊட்டமலை பரிசல் துறையை திறந்து, உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் பரிசல் இயக்க அனுமதி அளித்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், பரிசல் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். மேலும் பரிசல் ஓட்டுனர்களின் வாரிசுகள் பரிசல் ஓட்ட லைசன்ஸ் கேட்டு விண்ணபித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு பரிசல்ஓட்ட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே, ஊட்டமலை பரிசல் துறையை திறந்து, பாதுகாப்பு விதிமுறைகளுடன் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.