ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
12 May 2026, 1:26 am
<p><strong>ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை</strong></p><p>தருமபுரி, மே 11- தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக சுற் றித்திரிவதால், சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், அவற்றின் அருகே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக கர்நாடகா, ஆந்திராவிலிருந்து ஆண்டுதோறும் யானைகள் கூட்டம் உணவு, தண்ணீர் தேடி கூட்டமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம்பெயர்கி றது. ஒகேனக்கல் வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் 3 கூட்டங்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி சுற்றித்திரிகின்றன. கோடை விடுமுறையை கொண்டாடுவதற் காக ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணி கள், சாலையை கடக்கும் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், வாக னங்களில் அதிக ஒலி எழுப்பும் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சில நேரங்களில் யானைகள் சுற்றுலாப் பயணி களை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாக னங்களை நிறுத்தி உணவு அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும், வனத்துறை உரிய அறிவுறுத்தல், கண்காணிப்பு நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p>
