ஒகேனக்கலில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு
11 May 2026, 12:03 am

ஒகேனக்கலில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

தருமபுரி, மே 10- புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கலிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கலுக்கு அண்டை மாநிலங்கள், வெளியூர்களி லிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். இந்நிலை யில், இங்கு விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் மற்றும் உணவகங்க ளின் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் உத்தர விட்டிருந்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் ஆகியோரின் மேற்பார் வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன் வள ஆய்வாளர் திருப்பதி உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர், ஒகேனக் கல் மீன் மொத்த மற்றும் சில்லறை விற் பனை நிலையங்களில் ஆய்வு செய்த னர்.

மேலும், பார்மலின் உள்ளிட்ட ரசாய னம் ஏதும் மீன்களில் உள்ளனவா? என் பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் இரண்டு கடைகளிலிருந்து பலமுறை பயன்ப டுத்திய எண்ணெய், செயற்கை நிற மூட்டி பவுடர்கள் பறிமுதல் செய்யப் பட்டு, தலா ரூ.1000 அபராதம் விதிக்கப் பட்டது. சுற்றுப்புற சுகாதாரம், தன் சுத் தம், மூலப்பொருட்கள் தரமானதாகவும் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாது காப்பு சான்றிதழ் பெற்று வணிகம் செய்திடவும், முறையாக புதுப்பித்தல் வேண்டும் என உணவு பாதுகாப்பு அலு வலர் நந்தகோபால் தெரிவித்தார்.