ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மீண்டும் தடை
16 hours before

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மீண்டும் தடை

தருமபுரி, ஆக.10-காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் திங்களன்று மீண்டும் தடை விதித்துள்ளது.கர்நாடகா மாநிலத்திலுள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 14,000 கன அடி வீதம் உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி, ஞாயிறன்று நிலவரப்படி விநாடிக்கு5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்களன்று காலை 7 மணி நிலவரப்படி6,000 கனஅடி ஆகவும், 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, பிரதானஅருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர்வே.சரவணன் திங்களன்று முதல்தற்காலிக தடை விதித்துள்ளார்.

எனினும், அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்க 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்ததடை ஞாயிறன்று விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.