ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிற மாற்றம் குடிநீரை காய்ச்சிக்குடிக்க
25 Jun 2026, 12:34 am
<p><strong>ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிற மாற்றம் குடிநீரை காய்ச்சிக்குடிக்க</strong> </p><p>அறிவுறுத்தல் தருமபுரி, ஜூன் 24- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிற மாற்றம் ஏற்பட்டுள்ள தால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக்குடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகே னக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர் தர மாற்றம் மற்றும் பச்சை நிறத் தோற்றம் காரணமாக, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், கூடுதல் சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில், நீர்தர கண்காணிப்பு தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குடிநீர் சுத்திகரிப்பு செயல்முறைகளை முழுமையாக மேற்கொள்வதற்காக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழக்கமாக வழங்கப்படும் குடிநீர் அளவில் தற்காலிகமாக சுமார் 50 சதவீதம் மட்டுமே விநி யோகம் செய்ய இயலும். எனவே, பொதுமக்கள் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, தேவை யற்ற வீணாக்கத்தை தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், குடிநீரை நன்கு காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும். வீட்டு மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த்தொட்டி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குடிநீர் சேமிப்பு பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். குடி நீரின் நிறம், மணம் அல்லது சுவையில் மாற்றம் தென்பட் டால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.</p>
