வண்ணத்துப்பூச்சிகளின் வசந்த காலமும் அரிய வலசைப் பயணமும்!
8 Jun 2026, 1:06 am

வண்ணத்துப்பூச்சிகளின் வசந்த காலமும் அரிய வலசைப் பயணமும்!

மனிதனின் பேராசைக்கு நீர்நிலைகளும் காடு களும் பலியாகிக் கொண்டி ருக்கும் இவ்வேளையில், சிதைக்கப்பட்ட இயற்கை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும் பேராற்றல் வாய்ந் தது என்பதை ஒகேனக்கல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்து கின்றன.

தருமபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் வனப்பகுதியிலும், சமீபத்தில் மீட்கப்பட்ட அதன் நீர்நிலைகளிலும் தற்போது லட் சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாகப் படை யெடுத்துள்ளன.

காடுகளையும் நீர்நிலைகளையும் வண்ணமய மாக மாற்றியிருக்கும் இந்த பிரம்மாண்டமான இடப்பெயர்வு, தமிழகத்தின் மிக அரிய ஆச்சரிய மூட்டும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகும். தமிழகத்தில் ஆண்டு தோறும் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைக ளுக்கு இடையே ஆறு மாதங் களுக்கு ஒரு முறை இந்த இடப்பெயர்வு வியத்தகு முறையில் நடக் கிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலத் தில் மேற்குத் தொடர்ச்சி மலை யின் நீலகிரி, சிறுவாணி, ஆனை மலை ஆகிய பகுதிகளிலிருந்து புறப்பட்டு, கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஏற்காடு, பச்ச மலை, கொல்லிமலை, கல்வரா யன் மலைகளுக்கு இவை பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஆபத்துகளைத் தாண்டி பயணம் செய்கின் றன.

அதேபோல், வடகிழக்கு பருவமழை துவங்கும் போது, அங்கிருந்து மீண்டும் தங்க ளின் தாயகமான மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு திரும்புகின்றன. தட்பவெப்ப நிலை மாற்றம், உணவுத் தேவை மற்றும் பாது காப்பான சூழலில் இனப் பெருக்கம் செய்தல் ஆகிய காரணங்களுக்காகவே இந்த பூச்சிகள் தங்களின் வலசை பயணத்தை மேற்கொள் கின்றன.

வண்ணத்துப்பூச்சி களும், தேனீக்களும் எங்கு அதிகமாக வாழ் கிறதோ, அதுவே மனி தன் வாழ்வதற்கு உகந்த ஆரோக்கியமான சூழல்

உள்ள இடம் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அந்த வகை யில், ஒகேனக்கல்லில் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மரங் கள், செடிகள் மற்றும் சாலை களில் லட்சக்கணக்கில் இவை அமர்ந்திருப்பது அந்த வனப் பகுதியின் ஆரோக்கியமான சூழலியலைக் குறிக்கும் மிக முக்கிய சுற்றுச்சூழல் குறியீடா கும். உலகளவில் சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிக முக்கிய பங்குண்டு.

உலகம் முழுவதும் 17,000-க்கும் மேற் பட்ட வண்ணத்துப்பூச்சி வகை கள் கண்டறியப்பட்டுள்ள நிலை யில், இந்தியாவில் 1,350-க்கும் மேற்பட்ட வகைகளும், அதில் குறிப்பாக தமிழகத்தில் 327 வகைகளும் காணப்படு கின்றன. பல்லுயிர் பெருக் கத்தின் மையமாக விளங் கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட வகைகள் வாழ்கின்றன.

தற்போது ஒகேனக்கல்லில் நிகழ்ந்து வரும் வலசையில் ஃபுளூ டைகர், டார்க் ஃபுளூ டைகர், காமன் குரோ, டபுள்- பிராண்டட் குரோ, காமன் ஜே, டெய்ல்டு ஜே, காமன் ரோஸ், கிரிம்சன் ரோஸ், சவுத்திரன் பேர்டு விங், காமன் மோர்மன், புளு மோர்மன், லைம் பட் டர்ப்ளை, த்ரி ஸ்பாட் கிராஸ் எல்லோ, காமன் கிராஸ் எல்லோ, ஸ்மால் சால்மன் எராப் மற்றும் கிரிம்சன் டிப் உள்ளிட்ட பல அபூர்வ மற்றும் அரிய வண் ணத்துப்பூச்சி வகைகள் அடங் கும். இவை கூட்டம் கூட்டமாக பறப்பது பார்ப்பவர்களின் கண் களுக்குப் பேரழகை காட்சிப் படுத்துகிறது

சுற்றுச்சூழல் அமைப்பில் இவை வெறும் அழகியல் சார்ந்த உயிரினங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உணவுச் சங்கி லியின் மிகமுக்கிய அடித்தள மாகும். தவளைகள், பல்லிகள், ஓணான்கள் மற்றும் பல்வேறு பறவைகளுக்கு வண்ணத்துப் பூச்சிகளும் அவற்றின் புழுக் களும் முதன்மை உணவா கின்றன. மேலும், தேனீக்களுக்கு அடுத்தபடியாக தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு தேவை யான மகரந்த சேர்க்கையை உலகளவில் பெருமளவில் செய்பவை வண்ணத்துப் பூச்சிகளே ஆகும்.

இவை அழியு மாயின் தாவரங்களின் உற் பத்தித் திறனும், காடுகளின் அடர்த்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல்லுயிர் சூழலே அழியும் அபாயம் ஏற்படும். ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை களை மீட்டெடுப்பதும், காடு களை பாதுகாப்பதும் ஏதோ ஒரு தற்காலிக பொழுதுபோக்கு அல்ல; அது நம் எதிர்கால சந்ததி யின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அத்தியாவசிய கடமை என்பதை இந்த வண்ணத்துப் பூச்சிகளின் வருகை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது.

இயற்கையின் இந்த அதிசய கோலத்தைக் கண்டு ரசிப்ப தோடு மட்டுமன்றி, அவற்றின் பூர்விக வாழ்விடங்களான காடு களையும் நீர்நிலைகளையும் மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலை யாயக் கடமையாகும். (ந.நி)