வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹிட்டாச்சி ஆலை தொழிலாளர்களின் அதிரடி டூல்-டவுன் வேலைநிறுத்தம்
5 Jun 2026, 8:13 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ஹிட்டாச்சி ஆலை தொழிலாளர்களின் அதிரடி டூல்-டவுன் வேலைநிறுத்தம்

“நாங்கள் மனிதர்கள், இயந்திரங்கள் அல்ல!”

வேலைநிறுத்தம் 51

ம்ரானா, ஜூன் 5- தில்லி-தேசிய தலைநகர் பிராந்தி யத்தின் (NCR) தொழில்துறை வளை யத்தில் நீடித்து வரும் வர்க்கக் கொந்த ளிப்பின் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தின் நீம்ரானா ஜப்பானிய தொழிற்பேட்டையில் (RIICO Ja panese Zone) அமைந்துள்ள பன்னாட்டு ஜப்பானிய நிறுவனமான ‘ஹிட்டாச்சி’ (Hitachi) வளாகத்தில் தொழிலாளர்களின் மாபெரும் ‘டூல்-டவுன்’ (உபகரணங்களை முடக்கும்) வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்துள்ளது. இங்குள்ள ‘ஹிட்டாச்சி அஸ்டெமோ’ (Hitachi Astemo) மற்றும் ‘ஹிட்டாச்சி கெமிக்கல்’ ஆகிய இரு ஆலைகளிலும் பணிபுரியும் 1,200 முதல் 1,800 வரையிலான தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போர்க்களத்தில் இறங்கியுள்ளனர்.

இவ்வாலைகளில் அசெம்பிளி லைன்களை இயக்கும் தொழிலாளர்களில் 70 முதல் 75 சதவீதத்தினர் மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் ‘நேப்ஸ்’ (NAPS) போன்ற பயிற்சித் திட்டங்களின் கீழ் சுரண்டப்படும் தற்காலிகத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களே ஆலை உற்பத்தியை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தொழிலாளர்களின் குமுறல்

ஆலை வாயிலுக்கு வெளியே திரண்ட தொழிலாளர் களில் விஷ்ணு என்ற இளம் தொழிலாளி ஊடகங்களிடம் தனது குமுறலைப் பகிர்ந்துகொண்டார்.

“நாங்கள் யாரும் விருப்பப்பட்டு இந்த தூசியில் அமர்ந்து போராடவில்லை. நாங்கள் தினசரி 10 முதல் 12 மணி நேரம் உழைத்து, அதிநவீன வாகன பிரேக் சிஸ்டம்களை யும் சிக்கலான இயந்திரங்களையும் இயக்கும் தகுதி வாய்ந்த தொழிலாளர்கள். ஆனால், எங்களுக்குக் கிடைக்கும் ஊதியமோ இந்த நகரத்தின் வாடகையையும் மளிகை செலவையும் கூட சமாளிக்க முடியாத அற்பத் தொகையாக உள்ளது. அதைவிடக் கொடூரம், ஆலைக்குள் எங்களுக்கு மனிதநேயமிக்க கண்ணியம் மறுக்கப்படுவது தான். குடும்ப அவசரநிலை அல்லது உடல்நலக் குறை வால் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட, மேற்பார்வை யாளர்கள் உடனடியாக வேலைநீக்க மிரட்டல் விடுக்கிறார் கள். விடுமுறை நாட்களிலும் சம்பளத்தை வெட்டுகிறார்கள். நாங்கள் கேட்பது நியாயமான ஊதிய மறுஆய்வை மட்டும்தான்; நாங்கள் வெறும் இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!” என்று ஆவேசத்துடன் கூறினார்.

பணவீக்கத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு, சட்டப்படியான கூடுதல் நேர (OT) ஊதியம், அராஜக விடுப்புப் பிடித்த முறையை ஒழித்தல், நீண்டகால ஒப்பந்தத் தொழிலாளர் களை நிரந்தரமாக்குதல், உணவகத் தர மேம்பாடு ஆகிய 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போரா ட்டம் தொடங்கியது. முன்னதாக, ஏப்ரல் 1 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த தேசிய கருப்பு தின அறை கூவலை ஏற்று, தொழிலாளர்கள் கைகளில் கருப்புப் பட்டி அணிந்து நடத்திய அடையாளப் போராட்டம், இந்த முழு அளவிலான வேலைநிறுத்தத்திற்கு வலுவான அடித்தளமிட்டது.

விநியோகச் சங்கிலி முடக்கமும் கார்ப்பரேட்களின் பதற்றமும்

ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை ஷிப்ட் தொடங்கியதும், தொழிலாளர்கள் தங்களின் பணிகளை அடியோடு புறக்கணித்து ‘டூல்-டவுன்’ போராட்டத்தில் குதித்தனர். முந்தைய வார இறுதியில் அண்டை ஆலைகளான நிடெக் மற்றும் மதர்சனில் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, ஹிட்டாச்சி தொழிலாளர்கள் திட்டமிட்டு திங்கட்கிழமை காலையிலேயே உற்பத்தியை முடக்கினர்.

ஹிட்டாச்சி நிறுவனம் ‘ஜஸ்ட்-இன்-டைம்’ (Just-in-time) எனப்படும் உடனடி விநியோக முறையின் கீழ் இயங்குவதால், இந்த திடீர் உற்பத்தி முடக்கம் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை உலுக்கியது. நாட்டின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா போன்ற பெருநிறுவனங்களின் குருகிராம், புனே, சென்னை ஆலைகளுக்கான பிரேக் மற்றும் சேஸிஸ் உதிரிபாகங்களின் விநியோகம் உடனடியாக ஸ்தம்பித்தது. ஒரு சிறிய நகரத்தில் வெடித்த தொழிலாளர் எழுச்சி, ஒட்டுமொத்த இந்திய வாகன உற்பத்தியையே முடக்கும் வர்க்க வலிமையைப் பறைசாற்றியது.

முத்தரப்பு உடன்பாடும் தற்காலிகப் போராட்ட நிறுத்தமும்

பன்னாட்டு ஏற்றுமதி ஒப்பந்தங்களும், கார்ப்பரேட் களின் லாபமும் பாதிக்கப்படும் சூழல் உருவானதால், ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளர் துறையும், உள்ளூர் நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டன. முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கம் இல்லாத நிலையிலும், தொழிலாளர்கள் தங்களுக்குள் அமைத்த தற்காலிகப் பிரதிநிதிகள் குழு நிர்வாகத்துடன் நேருக்கு நேர் பேச்சு வார்த்தை நடத்தியது. நான்கு நாட்கள் நீடித்த கடுமையான முற்றுகைக்குப் பின், ஏப்ரல் 24 இரவு நீம்ரானா துணை கோட்ட நீதிபதி (SDM) முன்னிலையில் முத்தரப்பு உடன்பாடு எட்டப்பட்டது:

• மருத்துவ விடுப்புகளுக்கான அநீதியான சம்பளப் பிடித்தங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.

• உணவகத்தின் தரம் மற்றும் பணி இடப் பாதுகாப்பு உடனடியாக மேம்படுத்தப்படும்.

• உடனடி ஊதிய உயர்வை நிர்வாகம் பிடிவாதமாக மறுத்த போதிலும், ஹரியானா மாநில ஊதியக் கட்டமைப்புடன் ஒப்பிட்டு, இடைக்காலத்திற்குள் முறையான ஊதிய மறுஆய்வு செய்யத் தனித் தொழிலாளர் குழு அமைக்க ப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்ற நிர்வாகத்தின் மற்றும் அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழியைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்களின் வர்க்க ஒருமைப்பாட்டை நிலைநாட்டி மீண்டும் பணிக்குத் திரும்பினர்.