தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது தனது முதன்மைப்பணி

7 Apr 2026, 5:42 pm
பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது தனது முதன்மைப்பணி
<p><strong>பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது தனது முதன்மைப்பணி</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஏப்.7- மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரத்தை துவக்கிய திமுக வேட்பா ளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்த ரம், பவானி ஆறு மாசுபடாமல் தடுப்ப தும், தொகுதி முழுவதும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதும் தனது முதன்மையான பணியாக இருக்கும் என தீக்கதிருக்கு பிரத்யேக பேட்டிய ளித்தார். சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மேட்டுப் பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக &nbsp;வேட்பாளராக எஸ்.எம்.டி.கவிதா கல் யாண சுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மேட்டுப்பாளையம், கார மடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டணி &nbsp;கட்சிகளின் நிர்வாகிகள், தொழில் துறையினர், பல்வேறு சங்க நிர்வாகி களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு &nbsp;கோரினார். இதனிடையே செவ்வாயன்று திமுக &nbsp;வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல் யாண சுந்தரம் காரமடை அரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின் னர், வாக்கு சேகரிக்கும் விதமாக தனது &nbsp;முதல் பிரச்சாரத்தை துவக்கினார். இந்நிகழ்ச்சிகளில் திமுக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண் டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்எல்ஏ பா. அருண்குமார், காங்கிரஸ் கட்சி கோவை &nbsp;வடக்கு மாவட்டத் தலைவர் ரங்கராஜ், &nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா &nbsp;செயலாளர் கனகராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் பி.என்.ராஜேந்தி ரன், திமுக நகரச் செயலாளர்கள் குரு பிர சாத், அஷ்ரப் அலி, அறிவரசு, ஒன்றி யச் செயலாளர்கள் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், சுரேந்திரன், பிரதீப், காந்தி சிறுமுகை பேரூர் கழக செயலா ளர் உதயகுமார், காரமடை நகராட்சி தலைவர் உஷா, முன்னாள் நகரச் செய லாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய &nbsp;நிர்வாகிகள் உட்பட ஏராளமான திமுக &nbsp;மற்றும் இதன் கூட்டணி கட்சி தொண்டர் கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.. &nbsp;மேட்டுப்பாளையம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் திமுக வேட்பாளர் எஸ்.எம்.டி. கவிதா கல்யாண சுந்தரம், தொகுதியின் &nbsp;வளர்ச்சி குறித்த தனது தொலை நோக்குப் பார்வையை &lsquo;தீக்கதிர்&rsquo; நாளித ழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், &ldquo;கடந்த 25 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்க் கப்படாத பவானி ஆறு மாசுபடும் பிரச் சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே &nbsp;எனது முதல் கடமை. மேட்டுப்பாளை யம் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையான விளாமரத்தூர் குடிநீர் &nbsp;திட்டம் திமுக ஆட்சியில் ரூ.22 கோடி யில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போல், காரமடை நகராட்சியின் குடிநீர் &nbsp;தட்டுப்பாட்டை போக்க 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்&rdquo; என்றார். மேலும், வனவிலங்குகளால் ஏற்ப டும் பயிர் சேதங்களை தடுக்க மின் வேலிகள் மற்றும் அகழிகளை ஆழப் படுத்தும் பணிகள் போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ளப்படும் என்றும், &nbsp;சேதங்களுக்கு உடனடி இழப்பீடு &nbsp;வழங்கப்படும் என்றும் உறுதியளித் தார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காட்டூர் மற்றும் என்.சி.எம்.எஸ் &nbsp;ரயில்வே கேட் பகுதிகளில் மேம் பாலங்கள் அமைத்தல், சாலை விரிவாக் கம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை &nbsp;உருவாக்க தொழிற்சாலைகளை தொடங்குதல் ஆகியவற்றை முன்னெ டுப்பதாக அவர் தெரிவித்தார். &ldquo;கடந்த கால் நூற்றாண்டாக அதி முக எம்.எல்.ஏ-க்கள் செய்யத் தவறிய மக்கள் நலப்பணிகளை திமுக ஆட்சி யில் நான் நிறைவேற்றுவேன்&rdquo; என அவர் &nbsp;நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.