அவரது மூளையை 20 ஆண்டுகள் செயலிழக்கச் செய்ய வேண்டும்
6 Dec 2025, 1:30 pm
<p><strong>அவரது மூளையை 20 ஆண்டுகள் செயலிழக்கச் செய்ய வேண்டும்</strong></p>
<p>இத்தாலியின் புரட்சியாளர் அந்தோனியோ கிராம்ஷியின் முளையை 20 ஆண்டுகள் செயலிழக்க செய்ய வேண்டும் என்பதுதான் முசோலியின் ஆசை. இத்தாலியில் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அந்தோனியோ கிராம்ஷிக்கு எதிராக நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாசிச அரசின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனைக்காக கிராம்ஷி சிறையில் அடைக்கப் பட்டார். இத்தாலியின் தென் மாநிலத்தில் மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள சர்தீனியாவில் 1891 ஜனவரி 23 ஆம் நாள் ஒரு தாழ்ந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 7 சகோதர சகோதரிகள். தொடக்கப்பள்ளி வரை கல்வி கற்றார். வறுமையின் காரணமாக 11 ஆம் வயதில் வேலைக்கு போக ஆரம்பித்தார். ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் 10 மணி நேரம் உழைக்க வேண்டும். 9 லிரா மாத சம்பளத்தில் ஒரு கிலோ ரொட்டிதான் வாங்கலாம். புத்த கங்களை சுமப்பது தான் முக்கிய வேலையாகும் பல இரவுகளில் தனியாக அமர்ந்து அழுவார். கிராம்ஷி யின் முதுகில் தொந்தரவான ஒரு சதை கட்டி வளர தொடங்கியது. சிகிச்சை பயனளிக்கவில்லை இறுதி வரை கூனனாகவே வாழ்க்கையை கழித்தார். செஞ்சட்டைப் படை 1917 ஆம் ஆண்டு ரோம் நகர சோசலிஸ்ட் கட்சி யின் செயலாளராக கிராம்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்னரின் அடக்கு முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக முசோலினி கருஞ்சட்டை படையை உருவாக்கி முதலாளியின் பேச்சுக்கும் பணத்துக்கும் அடிபணிந்து தெருக்க ளிலும் தொழிற்சாலைகளிலும் படுகொலைகளை அரங்கேற்றினர். அடக்கு முறைக்கு எதிராக சிவப்புச் சட்டை படையை உருவாக்கினார். உலக ஏகாதி பத்திய ஊடகங்கள் எதிராக ஊளையிட்டன. 11 நாட்கள் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் பயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது. 1924 இத்தாலியின் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப் பேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பாசிசத்தின் கீழ் நாடாளுமன்றம் பயனற்றது என்று கிராம்ஷி உணர்ந்து இருந்தார் இனி காத்திருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த பாசிசத் தன்மை கொண்ட அரசு 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முசோ லினியை கொல்ல முயற்சி என்று வதந்தியை பரப்பி னார்கள் நவம்பர் 3ஆம் நாள் அமைச்சரவை கூடி அவ சர சட்டங்களை தயாரித்து 9 ஆம் நாள் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியது. கிராம்ஷி அவசரச் சட்டங்கள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்தார். நாடு கடத்தல், சிறை 1926 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டவர் எல்லோ ரையும் விட கிராம்ஷிதான் ஆபத்தானவர் என்று வடக்கில் அமைந்துள்ள உஸ்னிக் என்ற தீவுக்கு நாடு கடத்தி சிறையில் அடைக்க அவரை கைது செய்து கால்நடைகளை ஏற்றி செல்லும் லாரியில் கம்பிகளு டன் சேர்த்து இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்டார். கிராம்ஷி நிமிர்ந்து நிற்கவோ உட்காரவோ, படுக்கவோ, இயலவில்லை. இரண்டு வாரங்கள் அந்த பயணம் கோடை வெப்பத்தில் இருந்தது. ரோமிலி ருந்து புறப்படுவதற்கு முன்னரே அதைப் பற்றி தெரிந்திருந்தும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வில்லை. உடலில் நீர் கோர்த்து வெடித்து கொப்பு ளம் வடியத் தொடங்கியது. சிறையில் அளிக்கும் மட்ட மான உணவும் சாதாரண சிகிச்சை கூட இல்லாத நிலையில் உடல் அழுகி நலிந்து கொண்டிருந்தது. மனவலிமையும், இலட்சியமும் தான் அவருக்கு உதவியது. சிறையில் அவர் எழுதிய கடிதங்கள் இதற்கு சாட்சி, பற்கள் உதிர்ந்து விட்டன, ஜீரணக் கோளறால் வயிற்று வலி, உறங்கப் போனால் அதி காரிகள் இரவு சோதனை என்ற முறையில் தட்டி எழுப்புவார்கள், இரவில் மட்டும் தான் 5 மணி நேரம் உறக்கம். இறுதி நிகழ்ச்சியில் இருவர் உடலுக்கும் மூளைக்கும் ஏற்பட்ட சித்திரவதை கள் நோயின் தாக்கத்தால் இனிமேல் முளை செயல் படாது என நினைத்தும் சர்வதேச நெருக்கடியாலும் 10 ஆண்டுகளுக்கு பின் விடுதலை ஆனார். 1937 ஏப்ரல் 27 ஆம் நாள் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய ராணுவத்தினர் கொண்டு செல்லும் போது கொட்டும் மழை ரோமாபுரில் ஆள் நடமாட்டம் இல் லாத தெருவில் அவருடைய சகோதரர் கார்கோ கிராம்ஷியும் அவரது மனைவியின் சகோதரி தாத்தி யாவும் சென்றனர். 20 ஆண்டுகள் மூளை செயல் இழக்காமல் சிறைகளிலிருந்து கையெழுத்து பிரதி யில் 2848 பக்கங்கள் கொண்ட கடிதங்களும் குறிப்பு களும் சான்றாகும். நீதிமன்ற உத்தரவு அவரது மூளை யை செயலிழக்க வைக்க இயலவில்லை. ஹிட்லர் காலத்தில் கம்யூனிஸ்ட் ஜெர்மன் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த எர்னஸ்ட் தால்மன் நிலையுடன் இதை ஒப்பிடலாம். கிராம்ஷி சிறை வாழ்க்கையில் நோயாளியாக இறந்தார். தாலமன் சிறையில் கொல்லப்பட்டார். 1. குடிமைச்சமூகம் கிராம்ஷியின் படைப்புகளில் அடிக்கடி வெளிப் படும் ஒரு வார்த்தைதான் சிவில் சொசைட்டி அல்லது குடிமை சமூகம். இரண்டாவது பொலிட்டிக்கல் சொசைட்டி அல்லது அரசியல் சமூகத்திற்கு அரசு என்கிறோம். இயற்கையோடு இணைந்து காட்டு மிராண்டியாக வாழ்ந்த சமூகத்தில் இருந்து குடிமை சமூகம் மாறியது. அரசியல் சமூகத்தில் நிலைத்தி ருக்கும் வன்முறை அல்லது வர்க்கக் கூட்டணியே. மற்றொரு வர்க்கக் கூட்டணியின் மீது செலுத்தும் அதிகாரத்தின் கூறுதான் அரசு. அரசியல் அதி காரத்தை கைப்பற்ற போராட்ட உணர்வை பெறுவது தான் சோசலிச விழிப்புணர்வு ஆகும். அப்போது தான் ஒரு கம்யூனிஸ்ட் போராளியாக மாற முடியும் என்கி றார். புரட்சியாளர் லெனின், கிராம்ஷி வர்க்க போராட் டத்திற்கும் சித்தாந்த கோட்பாட்டிற்கும், கலாச்சா ரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடிமை சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை அனு மதிப்பார்கள். அரசியல் சமூகத்திற்கு ஆபத்து வரு மானால் சர்வாதிகாரத்திற்கு நகர்ந்து விடும். ஆளும் வர்க்கம் வலுவிழந்து முடிவை நெருங்கும் போது அரசு பலம்பெற்று பாசிசத்திற்கு நகர்கின்றது. தொடர்ச்சி III பக்கம் பார்க்க...</p>
