தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக மனநலம் பாதித்தவர் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

8 Jan 2026, 2:44 pm
மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக  மனநலம் பாதித்தவர் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
<p><strong>மாட்டிறைச்சி வைத்து இருந்ததாக &nbsp;மனநலம் பாதித்தவர் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்</strong></p> <p>ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலா வார் மாவட்டம் அக் லேரா அருகே பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பஜ்ரங் &nbsp;தளம் &nbsp;மற்றும் விஷ்வ ஹிந்து பரி ஷத் அமைப்பைச் சேர்ந்த இந்துத் துவா கும்பல் ஒன்று, மாட்டிறைச்சி வைத்து இருந்ததாகக் கூறி மன நலம் பாதித்த முதியவர் ஒருவர் மீது &nbsp;தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குத லில் பாதிக்கப்பட்ட முதியவர் வலி யால் அலறிய போது, இந்துத்துவா &nbsp;குண்டர்களில் ஒருவர்,&rdquo;இவன் எப்படி இருந்தாலும் ஒரு முஸ்லிம் தான்&rdquo; என்று வன்மத்துடன் வெறுப் &nbsp;புப் பேச்சை கக்கினர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து &nbsp;&ldquo;ஆல்ட் நியூஸ் (Alt News)&rdquo; ஊடகம் &nbsp;ஜாலாவார் மாவட்டக் காவல் கண் &nbsp;காணிப்பாளர் அமித் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப் படையில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக மூன்று பேர் &nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உடனடி ஜாமீன் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, இந்தத் தாக்குதலில் ஈடு பட்டவர்கள் ராகேஷ் ராவ், அஜய் பரேதா மற்றும் ரோகன் சென் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையினர் கைது செய்து &nbsp;நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளேயே குற் &nbsp;றம் சாட்டப்பட்ட மூவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.