கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
28 Dec 2025, 5:05 pm

விபத்து ஏற்படுத்திய கார்: காவல்துறை மீது குற்றச்சாட்டு கோவை, டிச. 28- இளைஞர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யாமல், காவல் துறை மெத்தனமாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரத் என்ற இளைஞர் மீது, அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென் றது. இதில் பலத்த காயமடைந்த பரத் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலை யில், சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்தும், உரிய ஆதாரங்கள் இருந்தும் விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறிந்து, உரிய நட வடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறையின் இந்த மெத்தன மான அணுகுமுறை தனக்கு நீதியை மறுப்பதாகத் தெரி வித்துள்ள அவர், தப்பியோடிய கார் ஓட்டுநரை உடனடி யாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் ஈரோடு, டிச.28- கொமாரபாளையம் அரசுக்கல்லூரி அருகே கொட்டப் பட்ட மருத்துவக்கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கள், இந்திரா நகர் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மாதிரி பள்ளி பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொட்டப்படுகிறது. இதற்கிடையே ஊராட்சிக்கு சொந்த மான வாகனத்தில் அரசு மருத்துவமனையிலிருந்து மருத்து வக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொது மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மருந்து, மாத்திரைகள் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். குப்பை கொட்டும் பகுதியில் மருத்துவக்கழிவு கள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்த நாரீஸ்வரன் கூறுகையில், அரசுக்கல்லூரி பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம். தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும்போது மருந்து, மாத்திரைகள் போட பயன்படுத் தும் அட்டை பெட்டிகள் மட்டும் சேகரித்து கொண்டு வந்து குப்பை கொட்டும் இடத்தில் கொட்டியுள்ளனர். இனிமேல் அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும் போது, மருந்து மற்றும் மாத்திரைகள் போட பயன்படுத்தும் அட்டை பெட்டிகளையும் தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.

காவல்துறையை மிரட்டிய இந்துத்துவ ஆதரவாளர் கைது

கோவை, டிச.28- தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்து, மிரட்டி வீடியோ பதிவிட்ட இந்துத்துவ ஆதரவாளரை கோவை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், சனியன்று தனது நண்பருடன் சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சேது சந்தானம் என்ற பெயரிலான கணக்கிலிருந்து தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை மிரட்டியும், மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் விமர்சித்து வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. இதைப்பார்த்த விக்னேஷ் காவல் துறையில் புகாரளித்தார். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த வீடியோவை பதிவிட்டது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பதை கண்டறிந்தனர். இவர் தற்போது கோவை, காளம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். தீவிர இந்துத்துவ ஆதரவாளரான இவர், திட்டமிட்டே அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, காவல் துறையினர் சந்தானகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வன்மத்தைத் தூண்டும் விதமாகவும், அரசு அமைப்புகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சேலம், டிச.28- மேட்டூர் அணை பூங்காவிற்கு தொடர் விடுமுறையின் கார ணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன் றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. இப்பூங்கா விற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடு முறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்று லாப் பயணிகள் ஏராளமானோர் மேட்டூர் பூங்காவிற்கு வந்த னர். இவர்கள் மேட்டூர் காவிரி ஆற்றில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தனர். மேலும் பூங்காவிலுள்ள பாம்பு பண்ணை, மீன் பண்ணை, மான், முதலை ஆகியவற்றை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பெரியவர்கள் முதல் சிறுவர் சிறுமிகள் பூங்கா வில் உள்ள தூரி, சர்கல் விளையாண்டு மகிழ்ந்தனர். ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகுகளில் சென்று இயற்கை காட்சி களை கண்டு மகிழ்ந்தனர். மேலும், ஞாயிறன்று வழக் கத்தை விட கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வந்ததால் கூடுத லாக படகு சேவை செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதி களவில் ஏற்காடு வந்ததால், மலைப்பாதை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.