தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட் சுரண்டலுக்கு உதவும் இந்துத்துவா: வர்க்கப் போராட்டமே முறியடிக்கும்! - எஸ்.கண்ணன்

8 Dec 2025, 4:39 pm
கார்ப்பரேட் சுரண்டலுக்கு உதவும் இந்துத்துவா: வர்க்கப் போராட்டமே முறியடிக்கும்! - எஸ்.கண்ணன்

கார்ப்பரேட் சுரண்டலுக்கு உதவும் இந்துத்துவா: வர்க்கப் போராட்டமே முறியடிக்கும்!

இந்தியா ஒரு இறையாண்மையுள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதே இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை. 1949-இல் அரசியல் சாசனம் நிறை வேற்றப்பட்டபோது இந்த முழு வடிவம் இல்லை. பின்னர், 1976-ஆம் ஆண்டு 42-வது சட்டத் திருத் தத்தின் மூலம் ‘சோசலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ ஆகிய பதங்கள் சேர்க்கப்பட்டன. அன்றைய காலச் சூழலில், இந்தியக் குடியரசு - சோசலிச, மதச்சார்பற்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த சிலர், 1976-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தபோதும், தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அரசியல் சாசன முகப்பு ரையை மாற்றி அமைக்க முயற்சித்து வருகின்றன. அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும்கூட, ஒரு பாஜக உறுப்பினர் ‘மதச் சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகிய பதங்களை நீக்கக் கோரி தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அரசியல் சாசனத்தின் முகப்புரை, ஒட்டுமொத்த இந்திய அரசையும் வழிநடத்தும் சக்தி கொண்டது.

ஆனாலும், அரசு இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாஜக கட்சியினரின் கையில் சிக்கி இருப்பது, மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற பதங்களுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. திருடன் கையில் சிக்கிய சாவியைப் போல, அரசியல் சாசனச் சட்டம் சிக்கியுள்ளது. தன்னாட்சி அமைப்புகளில் காவிமயமாக்கம் முன்னர், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பாஜக ஆட்சியில் இருந்த மாநில அரசுகள் மதச்சார்பின் மைக் கொள்கையைப் பின்பற்றவில்லை என்றாலும், மத்தியில் மதச்சார்பற்ற கட்சிகள் அதிகாரத்தில் இருந்தன. ஆனால், இப்போது ஒன்றிய அரசை யும், 19 மாநில அரசுகளையும் பாஜக தன் கையில் வைத்துள்ளது. இந்தச் சூழலில், அரசு மட்டுமல்லா மல், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவிய துறைகளான நீதி, நிர்வாகம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., அமலாக்கத் துறை, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் பாடநூல் வடிவமைக்கும் கமிட்டி என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை நிறைவேற்ற உதவு கின்றன.

திருப்பரங்குன்றம்  அனுபவமும் திசை திருப்பலும் இத்தகைய காவிமயமாக்கலின் தாக்கத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.  சுவாமிநாதனின் தீர்ப்பு வெளிவந்தது. திருப்பரங் குன்றம் மலையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தூணில் தீபம் ஏற்றுவதுடன், இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ள எல்லைக் கல்லிலும் தீபம் ஏற்ற வேண்டும் என  அவர் தீர்ப்பளித்துள்ளார். மேலும், “நான் மட்டும் நீதிபதியாக இல்லையென்றால் நானே நேரில் சென்று தீபம் ஏற்றி இருப்பேன்” என்றும் குறிப்பிட் டுள்ளார். இது சட்டம், ஒழுங்கு மற்றும் மத நல்லி ணக்கத்தை விட, சங் பரிவார அமைப்புகளின் கோரிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதைப் போல அமைந்தது.

இதே திருப்பரங்குன்றம் மலையில், 1920-ஆம் ஆண்டில், நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்க ளுக்குச் சொந்தம் என்று நீதியரசர் ராம ஐயர் தீர்ப்பு வழங்கியதை பிரிட்டிஷ் நீதிமன்றமும் அங்கீக ரித்தது. ஒரே சாதி அடையாளத்தைக் கொண்ட நீதிபதிகள், ஒரே வழக்கு குறித்த தீர்ப்பில் இருவேறு நிலைப்பாடுகளை எடுப்பது, மதச்சார்பின்மை என்ற அரசின் கொள்கைக்கு ஏற்பட்ட சரிவைக் காட்டு கிறது. நீதிபதி சுவாமிநாதனின் இந்தத் தீர்ப்பு வெளி வந்த அதே காலகட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை அம லாக்கும் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற வேண்டிய நேரத்தில், நீதிபதியின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் ஒரு வார காலம் செய்திகளை ஆக்கிரமித்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.

மத நல்லிணக்கச்  சட்டங்களும் மீறப்படுதலும் வேணுகோபால் கமிஷன் (1982): மண்டைக்காடு மதக் கலவரத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் குழு, 1986-ஆம் ஆண்டில், மத வழிபாட்டு நிறுவனங்களுக்கு இடையில் குறைந்த பட்சம் 300 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. அருகருகே உள்ள வழிபாட்டு மையங்கள் பதற்றமான சூழலை உரு வாக்கும் என்பதால், மத நல்லிணக்கத்தைக் காக்க  இம்முடிவு எடுக்கப்பட்டது. 43 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த உத்தரவையும், மத நல்லிணக்க உணர்வையும் மதிக்காமல்தான், திருப்பரங்குன்றம் தீர்ப்பு சங் பரிவார அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வழங்கப்பட்டுள்ளது. 1991 மத வழிபாட்டுச் சட்டம்: பாபர் மசூதி பிரச்சனை கலவரச் சூழலை உருவாக்கியபோது, புதிய கலவரங்கள் உருவாவதைத் தடுக்கவும், மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது (பாபர் மசூதி பிரச்சனைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது). புதிதாக வழி பாட்டு மையங்களை முன்வைத்துச் சங் பரிவார்  அமைப்புகள் புதிய கலவரங்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்பதே இதன் பொருள். இத்த கைய சட்டங்களின் நோக்கத்தைப் புறக்கணித்து, தன்னாட்சி அமைப்புகள் காவிமயமாக்கப்பட்டு வரு கின்றன. நீதிமன்றங்களும் கலவரக்காரர்களுக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கின் றன. இவையனைத்தும் சமூகத்தில் வரலாற்று ரீதியில் கட்டியமைக்கப்பட்ட ஒற்றுமையையும், தொழி லாளி வர்க்க ஒற்றுமையையும் பாதிக்கிறது. வலதுசாரிகளும்  கார்ப்பரேட் சுரண்டலும் : கள்ளக் கூட்டு உலகம் முழுவதும் வலதுசாரி அமைப்புகள் கோலோச்ச முயற்சிக்கின்றன.

நவீன தாராளமயக் கொள்கைகள் தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, மீண்டும் முதலாளிகளுக்குச் சாதகமாகச் சட்டங்களை மாற்றி அமைக்கின்றன. இதற்கு எதி ரான போராட்டங்களைத் தடுக்கும் விதமாகவே அடை யாள அரசியல் அல்லது வலதுசாரி சக்திகள் தொழி லாளர்கள் மத்தியில் தீவிரமாகச் செயல்படுகின்றன. கார்ப்பரேட்டும் வகுப்புவாதமும் கொண்டி ருக்கும் கள்ளக் கூட்டு இந்த அடையாள அரசியலை மேம்படுத்தி, வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்து கிறது. இந்த உறவின் நான்கு பரிமாணங்கள் பின் வருமாறு: Hகார்ப்பரேட் நிறுவனங்கள், இந்துத்துவா அமைப்பு களின் தலைவர்களைப் பயன்படுத்தி, தொழி லாளர்கள் மத்தியில் தங்கள் அதிகாரத்தை அதி கரிக்கின்றன. Hவகுப்புவாதம், கார்ப்பரேட் நிறுவனங்களின் செல் வாக்கைச் சமூகத்தில் அதிகரிக்க உதவும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுகிறது.

H இந்தக் கள்ள உறவு, சமூகத்தை மதச்சார்பற்ற விழு மியங்களிலிருந்து விலக்கி வைக்க, அவர்களுக்கு உதவுகிறது. Hஇந்தக் கள்ளக் கூட்டு மத நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த அக்கறையைப் பிளக்கும் பணியில் ஈடுபடுவதால், சமூகத்தில் பதற்றமான நிலை நீடிக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் சமூக நலன்களைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக, இரண்டும் பின்னிப் பிணைந்து செயல் படுகின்றன. தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான போராட்டம் மக்கள் தங்கள் வழிபாட்டை முடித்து, நிம்மதி யான வாழ்க்கைப் பாதையை நோக்கிச் செல்லக் கூடாது என்ற முறையில் பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அமைந் துள்ளன. எனவே, தொழிலாளர் விரோத ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற போராட்டம் தீவிரம் பெற வேண்டும். அதற்குச் சமூக நல்லிணக்கமும், வர்க்க உணர்வும் மிக அதிகமாகப் பெருக வேண்டி யது அவசியமாகும்.

தலைநகர் தில்லியைச் சுற்றி ஓராண்டுக்கு  மேல் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடி வெற்றி பெற்ற னர். சீக்கியர், இஸ்லாமியர், இந்து என அனைத்துப் பகுதி விவசாயிகளும் இணைந்து நடத்திய அந்தப் போராட்டத்திற்குப் பின்னரே மோடி அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இப்போதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்குத லுக்குத் துணை செய்யும் 4 தொகுப்பு சட்டங்க ளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொழிற்சங்க அமைப்புகள் திட்டமிட்டுள்ள வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களுக்கு, இந்துத் துவா அமைப்புகள் பெரும் தடையாக இருப்பதை உணர முடிகிறது. இந்தப் பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிப்பதே நம் வாழ்வாதாரத்தைக் காத்திட உதவும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.