தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மங்களூரு கர்நாடகாவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளி மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

16 Jan 2026, 3:00 pm
மங்களூரு கர்நாடகாவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளி மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
<p><strong>மங்களூரு கர்நாடகாவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளி மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்</strong></p> <p>பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு நாடு முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட அமைப்பு களின் இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம், &nbsp;தலித் மற்றும் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் மீது வங்கதேசத்தவர் என்று வகுப்பு வாத கண்ணோட்டத்துடன் முத்திரை குத்தி &nbsp;தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்துத்துவா குண்டர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் &nbsp;நடத்தினர். தற்போது கர்நாடகாவிலும் இத்தகைய &nbsp;தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் தில்ஜான் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞர் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு பணிபுரிந்து வரும் இவருக்கு கன்னட மொழி சரளமாகப் பேசத் தெரியும். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இந்துத்துவா குண்டர்கள் 4 பேர் தில்ஜானை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அவர்கள் அன்சாரியிடம்,&rdquo;நீ வங்கதேசத்தவர் தானே?&rdquo; என்று அவரது ஆதார் அட்டையைக் கேட்டு மிரட்டியதோடு,&ldquo;ஜெய் ஸ்ரீராம்&rdquo; என்று முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குலூரைச் சேர்ந்த சாகர், தனுஷ், ரதீஷ் தாஸ், மோகன் &nbsp;ஆகிய 4 பேரை காவல்துறையினர் அடை யாளம் கண்டுள்ளனர். இவர்களில் ரதீஷ் தாஸ், தனுஷ், சாகர் ஆகிய மூன்று பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள மோகனை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.