தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இந்துஸ்தான் ஜிங்க் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்

19 May 2026, 9:57 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இந்துஸ்தான் ஜிங்க் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இந்துஸ்தான் ஜிங்க் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டம்

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகக் கொதித்தெழுந்த ராஜஸ்தான் உழைப்பாளர்கள்!

வேலைநிறுத்தம் 24

சித்தூர்கர், மே 19- கார்ப்பரேட் நிறுவனங்களின் பளபளப் பான லாபக் கணக்குகளுக்குப் பின்னால், தங்களின் ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தி உழைக்கும் ஒப்பந்தத் தொழிலா ளர்களின் அவல நிலை ராஜஸ்தான் மாநிலத்தின் சுரங்கத் தொழில் மண்டலத் தில் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

வேதாந்தா (Vedanta) குழுமத்தின் துணை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஜிங்க்’ (Hind ustan Zinc) நிறுவனத்தின் பல்வேறு ஆலை கள் மற்றும் சுரங்கங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக வும், மனிதக் கண்ணியத்திற்காகவும் நடத்திய வீரம்செறிந்த போராட்டம், இந்தி யத் தொழில்துறைக்கு ஒரு புதிய எச்ச ரிக்கையை விடுத்துள்ளது.

இத்தொடரின் 24-ஆவது பகுதியில், இந்தத் தீரமிக்க போராட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர்கர், பில்வாரா (Bhilwara) மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில் மண்டலங்களில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஜிங்க் நிறு வனத்தின் ஆலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவுகளில், 2026-ஆம் ஆண்டின் தொடக்க த்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தன்னி ச்சையான மாபெரும் போராட்டங்கள் வெடித்தன.

உலகளவில் மிகக் குறைந்த செலவில் துத்தநாகம் (Zinc) மற்றும் வெள்ளி உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று நிதித்துறையில் கொண்டாடப்படும் இந்த நிறுவனத்தில், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளர் களின் கோபம் எரிமலையாக வெடித்துள்ளது.

தொடரும் சுரங்க விபத்து மரணங்களும் தொழிலாளர்களின் ஆத்திரமும் அபாயகரமான நிலத்தடி சுரங்கப் பணி களில் போதிய பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது அவசரகால மருத்துவ வசதி களோ இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது இப்போராட்டம் தீவிர மடைய முக்கியக் காரணமாகும்.

அண்மையில், பில்வாரா மாவட்டத்தில் உள்ள ராம்புரா அகுச்சா (Rampura Agucha) நிலத்தடி சுரங்கத்தில் இரவு ஷிஃப்ட்டில் பணியாற்றிய கிஷன்லால் குர்ஜார் என்ற ஒப்பந்தத் தொழிலாளி, போதிய மருத்துவ உதவி கிடைக்காததால் பரிதாபமாக உயி ரிழந்தார்.

நிர்வாகத்தின் இந்த அலட்சி யத்தைக் கண்டித்து, அவரது உறவினர் களும் உள்ளூர் கிராம மக்களும் மருத்துவ மனைக்கு வெளியே திரண்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே சுரங்கத்தில் கடந்த 2021 ஜூன் மாதத்தில் நடந்த வெடி விபத்தின் போது ஜீவ்ராஜ் ஜாட், கேம் பகதூர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த கோரச் சம்ப வத்தை இந்த மரணம் மீண்டும் நினைவு படுத்தியது.

இத்தகைய தொடர் விபத்துகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, தொழிலா ளர்களின் உயிரைப் பணயம் வைப்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டி யுள்ளன.

8 மணி நேர வேலையும் - கார்ப்பரேட் அராஜகமும் “8 மணி நேர வேலை” என்ற உலகளா விய சட்ட விதியை நிலைநாட்டுவதே இப் போராட்டத்தின் முதன்மை முழக்கமாக உரு வெடுத்தது.

பானிபட், சிங்ரௌலி, பக்ஸர் ஆகிய தொழில் மண்டலங்களை போன்றே, இங்கும் ஒப்பந்தத் தொழிலாளர் கள் 12 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால், இதற்கான கூடுதல் நேர ஊதியம் (Over time Pay) இரட்டிப்பாக வழங்கப்படாமல், ஒற்றை வீதத்திலேயே கணக்கிடப்படுகிறது அல்லது முற்றிலும் மறுக்கப்படுகிறது.

மேலும், பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ போன்ற சமூகப் பாதுகாப்பு பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது டன், ஆலைக்குள் தூய்மையான குடிநீர், கழிப்பறை மற்றும் முறையான ஓய்வறை வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமை ப்புகள் கூட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டு கள் தொடர்ந்து பணியாற்றிய போதிலும், தங்களை நிரந்தரமாக்கக் கோரும் தொழி லாளர்களை வேலைநீக்கம் செய்துவிடு வோம் என்று இடைத்தரகர்களான ஒப்பந்த தாரர்கள் மிரட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டிஜிட்டல் ஒருமைப்பாடும் - புதிய வடிவ வர்க்கப் போராட்டமும் இந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக ‘யெல்லோ ஹெல்மெட்’ (#YellowHelmet) போராட்டக் காட்சிகளைப் பகிர்ந்து, அலை அலையாகத் தன்னிச்சையாக ஒன்றிணைந்துள்ளனர்.

தேசிய ஊடகங்கள் இந்தப் போராட்டங் களைப் புறக்கணித்த போதிலும், இந்த டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மூலமாக ராஜஸ்தானின் பல்வேறு ஆலைகளுக்கு இடையே ஒரு மாபெரும் வர்க்க ஒருமைப் பாடு (Class Solidarity) உருவாகி யுள்ளதைப் பார்க்க முடிகிறது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் - சமூகக் கிளர்ச்சியும் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்தினால் ஏற்படும் கடுமை யான தூசு மாசடைவு, நிலத்தடி நீர் வற்றிப் போதல் மற்றும் விவசாயப் பாதிப்பு களால் சுற்றியுள்ள கிராம மக்கள் நீண்டகால மாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022-இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) இந்நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீட்டு அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், சுரங்கப் பாதிப்புக்குள்ளான கிராம ங்களைச் சேர்ந்த விவசாயக் குடும்பங் களின் பிள்ளைகளே இந்த ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பதால் இந்தத் தொழிலாளர் போராட்டம் ஆலை வாயில்களைத் தாண்டி உள்ளூர் கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயி களின் ஆதரவோடு ஒரு மாபெரும் சமூகக் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

கார்ப்ப ரேட் நிறுவனங்களின் அதீத லாப வேட்டைக்கு எதிராக, உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைகளையும் கண்ணியத்தை யும் மீட்டெடுக்க ராஜஸ்தான் மண்ணில் நடத்தியுள்ள இந்தப் போராட்டம் முதலாளி த்துவத்திற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக் கையாகும். - லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.