முந்தய பக்கம்

புதுச்சேரியில் லெனின் சிலை முன்பு இந்து முன்னணியினர் அராஜகம்

24 Dec 2025, 4:16 pm
புதுச்சேரியில் லெனின் சிலை முன்பு  இந்து முன்னணியினர் அராஜகம்
<p><strong>புதுச்சேரியில் லெனின் சிலை முன்பு &nbsp;இந்து முன்னணியினர் அராஜகம்&nbsp;</strong></p> <p>புதுச்சேரி, டிச.24- புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதிக்கு உட்பட்ட &nbsp;திருவள்ளுவர் சாலை, லெனின்வீதி சந்திப்பில் &nbsp;40 ஆண்டு களுக்கு மேல்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. &nbsp;இந்த இடத்தில் கடந்த வாரம் மாமேதை &nbsp;லெனினின் முழு உருவச்சிலை வைக்கப் பட்டது. சம்பவத்தன்று செவ்வாய்கிழமை இரவு (டிச-23) இதனை அறிந்த பாஜ கவை சேர்ந்த இந்து முன்னணியினர் லெனின் சிலைக்கு கீழே விநாயகர் சிலையை வைத்து அராஜ கத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை கேள்வி பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில் அக்கட்சியினர் &nbsp;காவல்துறை யில் புகார் அளித்தனர். &nbsp;இத்தகவல் &nbsp;அறிந்து வந்த காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை எச்சரித்ததோடு விநாயகர் சிலையை அப்புறப் படுத்தினர். மேலும் லெனின் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாது காப்பு அளித்ததோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினரை சமாதனம் செய்து அங்கு இருந்து அனுப்பி வைத்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram