தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு

29 Jun 2026, 10:06 pm
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு

ஒன்றிய பாஜக அரசின் “தேசியக் கல்விக் கொள்கை” என்ற ஒற்றையாட்சிச் சூழ்ச்சியின் கீழ், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிவழிக் கொள்கையைத் தன்னிச்சையாகவும் அவசர கதியிலும் திணிக்கும் முயற்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி யையும் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தாண்டு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் நிலையில், திடீரென அவர்களின் இரண்டாவது மொழியை வலுக்கட்டாயமாக மாற்றச் செய்வது கல்வித்துறையில் அரங்கேறும் ஒரு பாசிச அடக்குமுறையாகும்.

ஆங்கிலத்தை ஒரு “அந்நிய மொழி” என்று வகைப்படுத்தி, அதன் மூலம் பிரெஞ்சு போன்ற பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைத் தடுத்து, ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளைப் படிக்க வேண்டும் என்று மே மாதத்தில் சிபிஎஸ்இ பிறப்பித்த எதேச்சதிகார உத்தரவு கல்வியாண்டு தொடக்கத்தில் பெரும் குளறுபடிகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பிரெஞ்சு மொழி யிலிருந்து திடீரென தமிழ் அல்லது பிற மொழி களை இரண்டாம் மொழியாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு மன அழுத்தத்தி ற்கு ஆளாகியுள்ளனர். இது தமிழ், கொங்கணி, மலையாளம் போன்ற உள்ளூர் தாய்மொழிகளின் மீதான உண்மையான அக்கறையினால் எடுக்கப் பட்டமுடிவு அல்ல. மாறாக, உள்ளூர் மொழிகளைப் போதிக்கப் போதிய ஆசிரியர்களோ அல்லது முறையான பாடப்புத்தகங்களோ இல்லாத சூழலைத் திட்டமிட்டு உருவாக்கி, மாணவர்கள் வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிரு தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயச் சூழலை ஏற்படுத்துவதே ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் நயவஞ்சகத் திட்டமாகும்.

இதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புக ளுக்கும் பெற்றோர்களின் போராட்டங்களுக்கும் பணிந்து, தற்போது சிபிஎஸ்இ நிர்வாகம் சில தற்காலிகத் தளர்வுகளை அவசரமாக அறி வித்துள்ளது. இதன்படி, தற்போது 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றும், 7, 8, 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசிய மில்லை என்றும் விதிகளில் தளர்வு வழங்கப் பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே இரண்டு வெளி நாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம் என்றும், கூடு தலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப் படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ மழுப்பலாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்தத் தற்காலிகத் தளர்வுகள் என்பது மக்களின் போராட்டக் குரல்களை ஒடுக்குவதற்காகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னடைவிலிருந்து தப்பிப்பதற்காகவும் ஆடப் படும் ஒரு நாடகமே தவிர, இப்போதும் மறைமுக மாக இந்தியைத் திணிக்கும் ஒட்டுமொத்தப் பாசிச நோக்கம் கைவிடப்படவில்லை. எனவே, மாண வர்களின் அடிப்படை மொழியுரிமையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைக்கும் மோடி அரசின் மக்கள் விரோதக் கல்விக் கொள்கை களை தொடர்ந்து வீரியத்துடன் எதிர்ப்போம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.